பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் முழக்கம்

213

அளவில் எதிர்க்கக் கூடாதென எண்ணிய அவ் உட்பகைவர், பகையாளி குடியை உறவாடிக் கெடுக்கத் தொடங்கினர். அதன்பின் அவர்கள் எழுத்தச்சன் என்ற தலைவன் மூலம் வட மொழியைத் தந்திரமாகப் படிப்படியாகக் கலந்து நூற்றுக்கு எண்பது வடமொழிச் சொற்கள் பயிலும் இன்றைய நிலைக்குக் கொண்டுவந்துவிட்டனர். தெலுங்கின் கதையும் கிட்டத்தட்ட

இதுவே.

கன்னடமும் தமிழும் இவ்வெதிர்ப்புக்குச் சிலநாள் தப்பியிருந்தன. அதனால்தான் பழங் கன்னடமும் பழந்தமிழும் ஒரு மொழிதானோ என்று சொல்லும்படி அவ்வளவு நெருங்கிய ஒப்புமையுடையவையாய் இருக்கின்றன. அப்பழங் கன்னடத்தைக் கையாண்டவர் பெரும்பாலும் சமண எழுத்தாளர்களே யாவர். அவர்களும் வடமொழிப் பற்றுடையவரேயாயினும், வடமொழி யினும் சமயப்பற்றே மிகுதியுடையவரானமையால், அத் தாய்மொழியைப் பேணி மேம்படுத்தினர். ஆனால், சமணம் ஒழிந்து வீரசைவ சமயமும், அதன் வாலைப்பற்றிச் சநாதனப் போர்வை போர்த்த புதிய இந்து சமயமும் தலை எடுத்தபோது, வரவர வடமொழி மிகுந்த கன்னடத்தின் போக்குத் தூய தமிழைப் புறக்கணித்து, வடமொழி விரவிய தெலுங்கைப் பின்பற்றலாயிற்று.

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனையும் கடிக்கத் தொடங்கிய வெறிநாய்போல், வடமொழி மயக்கம் தமிழையும் இறுதியில் பீடிக்கலாயிற்று. முதன் முதலில் இம்முயற்சியைச் செய்தவர் இங்கும் சமணரே. ஆனால், கன்னடத்தைப் போலவே இங்கும் அவர்கள் அதனை ஒரு வரம்புக்குட்பட்டே செய்தனர். புத்த சமண சமயங் களைந்த சமயாச்சாரியரும், ஆழ்வார்களும், இவ்வொரு வொரு வகையில் பெரும்பாலும் அவர்கள் சுவட்டையே பின்பற்றினர். ஆனால், பின்னாளைய வைணவ ஆசாரியரும், அவர்களைப் பின்பற்றிய சைவ உரையாசிரியரும் மயக்கத்திற்பட்டு மணிப்பிரவாள நடையை- வடமொழி கலந்த அவியல் நடையைப் புகுத்த முயன்றனர். முயன்றும், இவ்வனைவரும் வெற்றி பெறாதொழிந்தனர். தற்போது சிலர் தம் சமயமாகிய மாயாவாதப் பூச்சைச் வைணவங்களின்மீது பூசி, அவற்றின் உயிரை உறிஞ்சியபின்,

சைவ