பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(214) ||

அப்பாத்துரையம் 1

ஆங்கில மோகங்கொண்ட மக்களையும் தம் பக்கந் தூண்டி, மணிப்பிரவாள நடையைப் பல்லாற்றானும் தமிழர்மீது புகுத்த முயலுகின்றனர். 'திரு' என்னும் அழகிய தமிழ்ச் சொல்லுக்கு மாற்றாக ‘ஸ்ரீ' என்ற தமிழர்க்குப் புறம்பான வடமொழிச் சொல்லைப் புகுத்திச் செய்த - செய்கின்ற பேராரவாரம் இதற்குச் சான்றாகும். மக்கள் தனித் தமிழை விரும்புகின்றனர் என்று கண்டு, அதனைப் பயன்படுத்திக்கொண்டே, கூடுமிடங்களிலெல்லாம் வடமொழியைக் கையாண்டு, அத் தனித்தமிழ்ப் பயிரின் பேரால் கலப்புத் தமிழ்க் களைக்கும் ஓரிடம் அமைத்துவிட விரும்பும் சிலர் முயற்சியையும், இன்று இத்துறைப் பட்டோரது சூழ்ச்சி முறைக்கு ஓர் எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

தாய்மைக் கடுத்தபடியாகத் தமிழின் இரண்டாவது பண்பு அதன் கன்னித் தன்மையேயாம். அதாவது, தமிழ் எத்தகைய மொழியை அடுத்தும் தன்னிலை திரியாத் தன்மையுடையது. இத் தன்மையை அரைகுறையாக உடைய பிற தமிழ்க்குழு மொழிகள், வடமொழியைச் சிலநாள் எதிர்த்து நின்றன வெனினும், பின் அதன் சுழலிற்பட்டன.எனினும், அவை என்றும் வடமொழிக்கு அடிமைப் பட்டுவிடமாட்டா எனவும், அவற்றில் உள்ளூர நின்ற தமிழ்க் குருதி அவற்றுக்கு மீண்டும் ஊக்கமும், அந்நோயை எதிர்க்கும் வன்மையும் கொடுக்கும் எனவும் நாம் நம்பலாம்.

தமிழ் மொழியின் இக் கன்னித்தன்மைக்குப் பேருதவி புரியும் இன்னொரு பண்பு அதன் வண்மையாம். புதிய புதிய கருத்துகளையும் புனைவுகளையும் குறிக்கும் வகையில் தமிழ்மொழி எவ்வளவு வண்மையுடையதென அறிய வேண்டின், இன்றைய தமிழின் மேலெழுந்தவாரியான நடையை விலக்கி, உள்ளூரக் கிடக்கும் பழந்தமிழை (செந்தமிழை)க் கவனித்தல் வேண்டும். இதில் வினைச்சொற்களும் பெயர்ச்சொற்களும் எண்ணிய எண்ணிய பொருள்களைக் குறிக்கும் வளத்தை ஈண்டு ஒரு சிறிது கூறாதிருக்க முடியவில்லை. இன்றியமையா

டங்களில் அல்லாது, சொற்களை வழங்காமல் குறிப்பின்றி அறிய வைக்கும் சுருக்கமும், இப் பழந்தமிழில் இயைந்தவாறு வேறு எந்த மொழியிலும் இயையவில்லை என்னலாம்.

“கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்" இத்தகைய மொழி நடையை உடையது என்பது,