பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் முழக்கம்

215

அதனைப் பயில்பவர் எளிதிற் காணும் உண்மையாகும். இப் பழந்தமிழில் காணும் சிறு தொடர்களை நாம் இன்றைய தமிழில் பெருந் தொடர்களாலேயே குறிக்கவேண்டியிருக்கிறது.காரணம், குறுந்தொடர்களை நாம் மறந்தோம். அவற்றை நினைவில் வைக்கும் தமிழ் மரபை இழந்து பிறமொழி மரபைக் கொண்டோம்.

இன்று உண்டோம் என்ற தமிழ்ச் சொல்லை மறக்கப் பிறமொழிக் கலப்பு எப்படி உதவுகின்றது என்று பாருங்கள்! பிறமொழியிலிருந்து வரும் சொற்கள் பெரும்பாலும் பெயர்ச் சொற்கள் மட்டுமே. ஆகவே, உண்டோம் என்னும் வினைச் சொல்லுக்குப் பதிலாக உணவு என்னும் பொருளுடைய ஃபுட் (Food) என்ற பிறமொழிச் சொல்லுடன் எடுத்தோம் என்ற துணைவினையைச் சேர்த்து, ஃபுட் எடுத்தோம் என்ற, புது மணிப்பிரவாளத் தொடர் ஆயிற்று. நாளடைவில் மணிப்பிரவாள நடை சீர்கெட்டொழிந்தாலும்கூட, ஃபுட் என்பது மட்டும் மாறி உணவு என்றாகி, உணவு எடுத்தோம் என்கின்றோமேயன்றிப், பழைய மரபுப்படி உண்டோம் என்கின்றோமில்லை. பிறமொழிச் சொல் போயினும், அதன் வரவாலேற்பட்ட மரபு முறிவு மாறுவதில்லை என்பதற்கு இஃது ஒரு சான்று ஆகும்.

பழங்காலத்தில் ஏற்பட்ட வடமொழி முதலிய மொழிகளின் தலையீடும் இவ்வகை அழிவையே செய்தன. எடுத்துக்காட்டாகச் செங்கடல் என்ற தொடர் பண்புத் தொகை. சுருக்கமாகச் செம்மை கடல் என்ற இருகருத்துகளைத் தொடர்புபடுத்துவது.வடமொழியில் இத்தகைய தொகைநிலைத் தொடர் இல்லை. ஆகவே, வடமொழியிலிருந்து சிவப்பு என்பதற்குச் சரியாக லோகிதம் என்ற சொல்லும், கடல் என்பதற்குச் சரியாகச் சாகரம் என்ற சொல்லும் கொண்டுவரப் பட்டு லோகிதசாகரம் எனப்பட்டது. வடமொழிச் சொல்லும் தொடரும் தமிழ்க் காதுக்கும் உள்ளத்துக்கும் புதிதாகையால், முதலது பண்பு என்று காட்ட “ஆன” என்ற சொல்லையும், அஃது ஒரு வண்ணம் என்று காட்ட நிறம் என்ற சொல்லையும் சேர்த்து லோகிதமான சாகரம், லோகித நிறமான சாகரம் என்று கூறப்பட்டது. இந்த இயற்கைக்கு மாறான மணிப்பிரவாளத் தொடரே ன்றைய தமிழின் “சிவப்பான கட "சிவப்பான கடல்", "சிவப்பு