பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் முழக்கம்

217

இதுகாறும் மொழித்துறையின் தமிழ்ப் பண்பு கூறினோம். பிற துறைகளில் அஃது இன்னும் தெளிவாகக் கூடக்காணப்படும். ஆனால், இதில் ஓர் அரிய நயத்தை நாம் மறந்துவிடக்கூடாது. மொழியிலோ, சமயத்திலோ, பிறவற்றிலோ தமிழர்க்குத் தனிப்பண்பு உண்டு என்பதனால், அவர்கள் தனித்து வாழ்ந்தவர்கள் என்று கொண்டுவிடக்கூடாது. இவ்வெல்லாத் துறையுள்ளும் தமிழ் பிற இந்திய மொழிகளுடன் தெளிந்த மேலீடான உறவும், இந்தியாவுக்கு வெளியிலுள்ள மொழிகளுடன் மேலீடாகக் காணக்கூடாத ஆழ்ந்த உள்ளார்ந்த உறவும் உடையதாயிருக்கின்றது. இவ்வுறவுகள் யாம் முன் கூறியபடி பெரும்பாலும் தாய்மை உறவு அல்லது கொடுத்தல் உறவேயன்றிப் பெறுதல் உறவன்று. எடுத்துக்காட்டாகத் தமிழினின்றும் வடமொழி தன் உயிர்நாடியான சில ஒலிகளை யும், எழுத்துகளையும், சில இலக்கண மரபுகளையும், இலக்கிய இலக்கண விரிவையும் பெற்றது என்று காட்டக்கூடும். வடமொழியில் வால்மீகிக்கு முந்திய நூல்கள் பண்படாதவை. அதற்குப் பிந்தியவை மட்டுமே பண்பட்ட இலக்கியம் ஆகும். இங்ஙனம் பண்பட்ட நூல்கள் திடீரென்று எப்படித் தோன்றின?

தமிழ் நாட்டில் பண்பாடு ஏற்பட்டது சங்கங்களால்.

வடமொழியில் சங்கங்களிருந்ததாகக் கேள்வியில்லை. ஆனால், முதல் வடமொழிக் கவிஞனாகிய, வால்மீகி தமிழ்நாட்டை நன்கு அறிந்திருந்தவன் என்பது கண்கூடு. இலக்கணப் பண்பாடும், விரிவும், பாணினியினால் ஏற்பட்டது. அவர் தொல்காப்பியர் காலத்துக்குப் பிற்பட்டவர் என்பது அந்நூற் பாயிரத்தால் மட்டுமன்று, அதன் சூத்திர நடையாலும் தெரிகிறது.

பிற்காலத்தவர்கூட வட நாட்டிலும் பிற நாடுகளிலும் சங்கங்கள் மொழியைச் செப்பம் செய்ததையோ, நூல்களை ஆய்ந்து தேர்ந்து மதிப்பிட்டோ தொகுக்கவோ செய்தன என்பதையோ நாம் காணமுடியாது. அண்மைக் காலத்தில்கூட பிரான்சு நாடன்றி வேறெந்நாட்டிலும் சங்கங்கள் (Academies) ருந்ததாகத் தெரியவில்லை.

மேலும், வடமொழியிலுள்ள சித்தாந்த வேதாந்த நூல்கள் யாவும், இலக்கிய நூல்களில் பலவும், தமிழ் நாட்டுத் தமிழராலோ, மலையாளத்துப் பழந்தமிழராலோ, அல்லது