பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் 1

(218) || பழந்திராவிடர் தாக்கு மறையாது பொலிந்த வங்கம் மராடம் முதலிய நாட்டு மக்களாலோ மட்டுமே இயற்றப்பட்டன என்றும் வரலாற்றால் அறியலாம்.

தமிழரிடை சைக்கும், நாடகத்துக்கும் முன்னாளில் இலக்கணம் உண்டு. அது மட்டுமன்று; இயலில் ஐந்திலக்கணம் உள்ளது, தமிழ்மொழியில் மட்டிலுமே. வடமொழியில் அணி யிலக்கணம் இலக்கணத்தின் வேறாக “அலங்கார சாஸ்திரம்" என வளர்ந்துள்ளது. அஃது ஒன்றே அது பிற்காலத்திய வளர்ச்சி என்பதைக் காட்டும். தமிழில் முதல் இலக்கணமாகிய தொல்காப்பியத்தில் அது தனி அதிகாரமாகக்கூடப் பிரிக்கப்படவில்லை. இலக்கணத்துடன் இலக்கணமாக விரவிக் கிடக்கின்றது. அணியியலின் விதை வடமொழியில் இல்லை. தமிழிலேயே உள்ளது என்பது இதனால் பெறப்படுகின்றது. யாப்பின் செய்தியும் இதுவேயாகும். பொருளிலக்கணமோ எனில் அன்றும் இன்றும் தமிழன்றிப் பிறமொழிகளில் “காப்பி” அடிக்கப்படக் கூடாத ஒன்று.

தமிழர் இங்ஙனம் பிறர்க்கெல்லாம் அவரவர் நாகரிகத்துக் கான விதை உதவினர்; உரம் கொடுத்து உதவினர்;அத்துடனாகவே தம் நிலத்துக்கெனத் தனி விதையும் உரமும் வேறு உண்டுபண்ணிக்கொள்ளும் ஆற்றலுடையவராயும் இருந்தனர். இதனால்தான், தமிழ் நாட்டினின்றும் சமய அலைகள் பல வடநாட்டுக்கும் உலகுக்கும் சென்றும், தமிழ் நாட்டில் மேன்மேலும் இடையறாப் புதுப்புது வளர்ச்சிகள் இருப்பதைக் காண்கின்றோம்.

ல்

உலகில் சமயத்தோற்றமே - வடவர் வேதம், பாரசீகர் “அவெஸ்தம்” முதலியனகூட - தமிழ் அந்தணர் புறம்போந்து அமைத்தவை என எண்ணவும் இடமுண்டு. அதை விட்டு விட்டாலும்கூட அறிவுத்துறையில் முதன் முதல் கடவுள் ஆராய்ச்சி செய்தவர் தமிழரே என்பது வடமொழி நூலுரைகளிலேயே காணப்படுகின்றது. வேதாந்தங்களாகிய உபநிடதங்களை அருளியவர் அரசரேயென அவை கூறுகின்றன. அவருள் சனகர் சனற்குமாரர் தலைவர் ஆவர். இவர்கள் வேதங்களிலும் மிக்க பழைமையுடையவர் என்றும் அவை கூறுகின்றன. வேத சமயம் அறிஞரால் ஏற்கப்படாமல் போகவே,