தமிழ் முழக்கம்
219
அறிஞர் பேரால் உபநிடதங்கள் என்ற புது நூல்கள் செய்யப்பட்டு, வேதங்களின் மதிப்பை உயர்த்த அவற்றுடன் சேர்க்கப்பட்டன. இவ்வுபநிடதங்களின் சாரமாகிய பிரம சூத்திரங்களும் தமிழரிடமிருந்தே, தோன்றியிருத்தல் வேண்டுமென்பதனை அவற்றுக்கு உரைகண்ட பேராசியர் அனைவரும் தென்னாட்டினரே என்பதிலிருந்து உய்த்தறியலாம்.
அறிவுநெறியைப் பொறுத்தவரை கடவுட் கொள்கை தமிழ் நாட்டிலிருந்தே தோன்றியது. இதனைக் 'கடவுள்' என்ற சித்தாந்தக் கருத்துப் பொதிந்த தமிழ்ச் சொல்லொன்றே நன்கு விளக்கும். சித்தாந்தத்தை வகுத்த சந்தானாசாரியர் நால்வரும், வைணவ ஆசாரியரான இராமனுசரும் தமிழரே. அதுமட்டு மன்று, அவர் கோட்பாட்டை எதிர்க்க முயன்ற புறச்சமய ஆசாரியரான மாத்துவரும் சங்கரரும் தென்னாட்டிலிருந்தே தோன்றினர். இங்ஙனம், வரலாற்றுக் காலத்துக்கு முந்திய ஆராய்ச்சிகளில் புகாமல் வரலாற்றுக் காலத்துக்குட்பட்டு ஆராய்ந்தாலுங்கூட வேதாந்தத்தின் இரு கிளைகளான மாயாவாத நெறியும் சித்தாந்த நெறியும் தமிழ் நாட்டிலேயே பிறந்தவை என்பது தெளிவு.
இவற்றுள் தென்னாட்டுக்கே சிறப்பான தொன்னெறி, சித்தாந்தம். அதன் கிளையாய், அதனுடன் தென்னாட்டில் எதிர்த்து நிற்கமுடியாது வடநாடு போய்ப் பரந்த புறச் சமய நெறியே மாயாவாதம். இதனை வடமொழியாளரே “பிரச்சன்ன பௌத்தம்” (மாறுவேடம் பூண்ட பௌத்தம்) என்றும், “சமத்கார நாஸ்திகம்" (தந்திரமான நாஸ்திகம்) என்றுங் கூறுவர். அறிவுநெறித் துறையில் தமிழர், தனித்தமிழ் நெறியாகிய சித்தாந்த நெறியை வகுத்ததோடு இந்தியா முழுதும் பரந்துபட்ட மாயாவாதம் முதலிய நெறிகளைத் தோற்றுவிப்பதிலும் உதவியாயிருந்தனர் என்று காண்கிறோம்.
அன்புநெறியில் வடநாட்டுப் பாகவத இயக்கத்துக்குக் காரணமா யிருந்தவர்கள் துளசிதாசர், கபீர், சைதன்யர் முதலியவர்கள். அவர்களுக்குக் குருவாயிருந்தவர் இராமானந்தர். அவர் தெலுங்கு நாட்டினர். அவரே சிவாஜி மன்னனுக்கு ஆசிரியர். இவர் இராமானுசரையும் இராமானுசர் ஆழ்வார்களையும் பின்பற்றினவர். ஆழ்வார்கள் காலமோ