பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




220

அப்பாத்துரையம் 1

வடநாட்டுப் பாகவதக் காலத்துக்கு ஆயிரம் ஆண்டுகள் முற்பட்டது.எனவே, வடநாடெங்கும் பரந்த வைணவப் பயிரும் தென்னாட்டில் தோன்றியதே என்பது தெளிவு.

சைவமோவெனில் தமிழ்நாட்டிலேயே பிறந்து, தமிழ் நாட்டிலேயே முழுவளர்ச்சியும் அடைந்தது. அதன்

சமயாசாரியர்களாகிய நால்வர் பிறந்ததும், தேவார திருவாசகம் முதலிய சைவத் திருமுறைகள் எழுதப்பட்டதும் தமிழிலேயே. சமணரையும் பௌத்தரையும் எதிர்க்கும் வெறியில் சைவர் ஆரியச் சூழ்ச்சிக்கு ஓரளவு அடிமைப்பட்ட காலத்திலேயே சமயாசாரியரின் இப்புதுச் சைவம் எழுந்ததாதலால், இஃது ஆரியக் கலப்புப் பெறினும், உயிர்நிலைக் கருத்துகளில் தமிழ்ப் பண்புடையவையே என்று சொல்லத் தகும்.

எனவே, தமிழர்க்குச் சிறப்பான பழைய சமய நெறியுடன் இந்தியா முழுமைக்கும் பொதுவான பிற்காலச் சமய நெறிகளும் தமிழ் நாட்டையே உயிராகக் கொண்டவை என்று காணலாம்.

மொழியையும், சமயத்தையும் விடுத்து அறிவியல் கலைப் பகுதிகளை இனிப் பார்ப்போம்.

வான நூலில் தமிழர் இன்று காணும் அத்தனையும் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே பெற்றிருந்தனர். இதைச் சிலப்பதிகாரம் முதலிய சங்கநூல்களின் குறிப்பால் நாம் அறியலாம். அதுமட்டுமன்று; வடநாட்டாரிடை நாட்கணிப்புப் பெரிதும் திங்களை ஒட்டியதாகும். தென்னாட்டில் அஃது என்றும் ஞாயிற்றை ஒட்டியே நடப்பது கவனிக்கத்தக்க வேறுபாடாம். ஞாயிற்று முறையை வடநாட்டாரும் ஏற்ற பிறகுங்கூடத் தமிழர் திருக்கு என்ற நேர்முறையையும், டநாட்டார் அதனின்றும் தோன்றிய பள்ளிப்பிள்ளை வாய்பாட்டு முறையாகிய வாக்கிய கணிதத்தையும் பின்பற்றினர். மலையாள நாட்டில் இன்றும் வாக்கியக் கணிதம் ‘பரசியம்' என வழங்கப்படுகின்றது. 'பரசியம்' என்பது வடமொழியில் பிறருடையது எனப் பொருள்படும். 'திருக்கு' காட்சி எனப் பொருள்படும். எனவே 'திருக்கு' தமிழர் நேரில் கண்டதும், ‘பரசியம்’ அயலாராகிய ஆரியருடையதும் எனக் காணலாம். இயற்கையை நேரில் கண்டறிந்த திருக்கு முறையிலிருந்தே