பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் முழக்கம்

221

வாய்பாட்டு முறையாகிய வாக்கியங்கள் ஏற்பட்டிருக்க முடியும். ஆதலால், தமிழர் தமக்கென வானநூல் முறையொன்று வகுத்ததுடன், பிறருக்கும் வேறு தனிமுறை வகுக்க உடந்தையா யிருந்தனர் என்பதும் விளங்கும்.

மருத்துவத் துறையில் ஒப்புயர்வற்ற முழு அறிவு பெற்ற சித்தர்கள் வாழ்ந்ததும், அவர்கள் முறையாகிய சித்தர் நெறிவளர்ந்ததும், இத் தமிழ் நாட்டிலேதான். இம்மருத்துவ முறை இன்று புறக்கணிக்கப்பட்டிருப்பது உலக வியப்புகளுள் ஒன்றாகும். ஏனெனில், இதன் உள்ளார்ந்த தன்மைகளை நோக்கினால், இஃது எல்லா முறைகளையும்விட மிகச்சிறந்த மருத்துவ முறையாகும். வடநாட்டு ஆயுர்வேதம் மட்டுமன்று, மேனாட்டு மாற்று நிலை, இணைப்புநிலை நெறிகளைவிடக்கூட (Allopathic and Homeopathic systems) மேம்பட்டது என் காட்டலாகும். அதன் சிறப்புகளுள் ஒன்றிரண்டு மட்டும் கூறுவோம்.

று

பிற மருத்துவ முறைகளைவிட இது கண்கண்டது; கண்ணுடைய முறையாகும். எப்படியென்றால், இஃது ஒன்றே, உடல்நிலை, நோய்நிலை, மருந்து ஆகிய மூன்றையும் ஒருங்கே கணித்து மருந்து கூறுகின்றது. இன்றைய மேனாட்டு மருத்துவர் மக்கள் உடல்நிலையைக் கூறுபடுத்தாமல் நோய் அறிந்தவுடன் மருந்து கொடுப்பதைக் கண்கூடாக அறியலாம்.

மேலும், பிறமுறைகள், அம்முறைகள் வழங்கும் நாட்டில் கிடையாத பொருள்களைப் பயன்படுத்துவது, அவை அந்நாட்டில் பிறந்தவையே அல்ல என்று காட்டுகிறது. மருந்து சேர்ப்பதிலும் உண்டுபண்ணுவதிலும்கூட அவை பிறர் முறையைக் கடன் வாங்குவதனால், அவற்றை அடிக்கடி காரண காரியத் தொடர்பு காட்டமுடியாமல் குருட்டுத்தனமாகவே பின்பற்றுகின்றன.

இவற்றுள் முந்திய குற்றத்துக்கு ஐரோப்பாவில் விளையாத கொய்னாப் பொடியையும், இரண்டாவது குற்றத்திற்குக் காப்பி, தேயிலை, புகையிலை முதலிய பழக்கங்களை முதலில் மேற்கொண்டு, பின் அரை குறையாய்க் குற்றம் கூறிய வகையையும், இன்றும் நன்மை என்றோ தீமை என்றோ துணிய முடியாத அம்மை குத்தல், ஊசியிடல் என்பவற்றையும் கூறலாம்.