தமிழ் முழக்கம்
223
கலையிலும் தமிழரின் முதன்மை நன்கு விளங்கும். பரத நாட்டியம் இன்று விரிவும் நயமும்பட நிலைபெற்றிலங்கக் காண்பது தென்னாட்டிலேயேயாம். சிற்றன்ன வாசல் முதலிய டங்களிலுள்ள பழந்தமிழ் உயிர் ஓவியங்களே அண்மைக் காலத்தில் மலையாள நாட்டில் இரவிவர்மாவின் கலையாக மீண்டும் வளர்ந்தன. கலையின் வளர்ச்சி வட நாட்டில் ஆரியத்தாக்கு மட்டும் உள்ள பஞ்சாபு, காசுமீரம் முதலிய இடங்களில் ஏற்படாமல், திராவிடத் தாக்கும், திராவிடரோடு தொடர்புமுடைய இராஜபுத்திரரது தாக்கும் மிகுந்த அஜந்தா, எல்லோரா முதலிய இடங்களிலும், வங்கநாட்டிலும் மட்டிலுமே ஏற்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
சிற்பங்களோ எனில் போட்டியின்றித் தென்னாட்டுக்கே உரியனவாகும். தஞ்சைக் கோயில், திருமலை நாய்க்கன் மகால், மதுரைக் கோவில் முதலியவற்றுக்கு ஈடாக, ஏன்? முசுலிம்கள் வருமுன், வடநாட்டில் எத்தகைய சிற்பமும் இல்லை எனல்
காண்க.
இசைக் கலையில் மேலீடாகப் பார்ப்பவர்க்குக் கருநாடக இசை பெயரளவில் தெலுங்கு மொழியில் நிலவினும், உள்ளூர ஆராய்ந்து பார்த்தால் அதன் தோற்றம், வளர்ச்சி தற்போதைய செல்வாக்கு ஆகிய எல்லா வகையிலும் தெலுங்கு நாட்டைவிடத் தமிழ் நாட்டினுடனேயே நெருங்கிய தொடர்புடையது என்று காணப்படும்.
அதன் அறிவியல் பகுதியை உள்ளூர அறிந்தவரும், கலைப் பகுதியைத் திறம்படக் கையாளும் கலைஞரும், தமிழ் நாட்டில் பிறந்த தமிழரேயாவர். அதன் ஒப்பற்ற தலைவராக எண்ணப்படும் தியாராஜர்கூடத் தமிழ்நாட்டின் நடுநாயகமான திருவையாற்றில் தான் வாழ்ந்தவர் என்பதும் நினைவில் வைக்கத்தக்கது. பிற்கால அரசியலார் தெலுங்கு மொழிக்கு ஆதரவளித்த தனாலேயே தமிழரின் தமிழிசை தெலுங்கிசையாக உருவில் மாறியது. ஆனால், அக்கலையின் தோற்றம் தெலுங்கிசைக்கு மட்டுமன்று, தெலுங்கு மொழிக்கே முற்பட்டதாகும் என்பதை வரலாறு நன்கு எடுத்துக்காட்டும்.
இசையுடன் பிறந்த நாடகக் கலையிலும், உலகெங்கும் நாட்டியத்தைப் பரப்பிய உதயசங்கர் முதலிய கலைஞர்