அப்பாத்துரையம் - 1
(224) || பாராட்டுவது தென்னாட்டினையே. இரண்டாயிரமாண்டுகட்கு முன் எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தில் இந்நாடகக் கலையின் விரிவை நோக்குவோர் அதன் பண்டை உயர்வினையும், நுட்பத்தையும் கண்டு வியவாதிரார்.
தமிழ்ப் பண்பின் இன்னொரு பகுதி அதன் இறவாத் தன்மையாம். இப்பண்பு உண்மையில் அதன் வண்மையின் ஒரு பகுதியேயாகும். ஓய்வு வேண்டா வளர்ச்சிப் பெருக்கத்தை உடைய மொழி தளர்ச்சியடையாத மொழியல்லவா?
அத்தோடு, தமிழ்க்கு இதுவரை ஏற்பட்ட இக்கட்டுகள் கொஞ்ச நஞ்சமல்ல. நண்பரையே யன்றிப் பகைவரையும் ஒப்ப வரவேற்று இருவரையும் வேற்றுமை தெரியாமல் தம்மகத்தே வைத்து வளர்த்தவர் - வளர்ப்பவர், தமிழர்
அங்ஙனம் உடலினுள் சென்று உயிர் நாடியைத் துளைத்து உள்ளுயிரை உறிஞ்சும் பகைப் புழுக்களின் செயலை எதிர்க்கும் ஆற்றல் தமிழினுக்கன்றி வேறு எம் மொழிக்கு இருக்கக்கூடும்!
இரண்டாம் உலகப் போரில் செருமானியரைத் தம் நாட்டுக்குள் புகவிட்டுத் தாம் அவர் அழிவின் முழுவேகத்தையும் ஏற்றும் எதிர்ப்பு வன்மை குன்றாமல், படிப்படியாக அவ்வெதிரிகளின் வலிமையைக் குறைத்து, அவர்களை விழுங்கிய மாபெரும் இரஷ்ய நாடு ஒன்றையே தமிழின் ஒப்பற்ற இவ்வுயிர் வன்மைக்கு - இதன் இறவாத் தன்மைக்கு - உவமையாகக் கூறலாம்.
தமிழ் மொழியின் தனிப்பண்பு பற்றி இதுகாறும் கூறினோம். இனி, இத் தனிப்பண்புகள் எழுந்த வகையையும், அவற்றால் உலகின் முழுமுதல் மொழியாய் இருக்கும் தகுதியுடைய தமிழ் நலிவடைந்து வருவதன் காரணங்களையும் ஆராய்வோம்.
தமிழின் தனிச்சிறப்புக்குக் காரணமாவது தமிழரின் தனிப்பண்பே யாகும். ஆனால், செம்பில் களிம்புபோல் இப்பண்பினுள்ளே ஒளிந்து கிடந்தது ஒரு சிறு தூசு. அதுதான் பேரணையில் கிடந்த சிறு கீறல் போல் வரவர விரிந்து தமிழ் நலிவுக்கும் தமிழர் நலிவுக்கும் காரணமாயிருந்துவருகிறது.
தமிழர் குணங்களுள் மிகச் சிறந்ததும், இன்று அவர்கள் நிலைமையை இழிவுபடுத்துவதற்குக் காரணமாக இருப்பதுமான