தமிழ் முழக்கம்
[225
குணம் வேளாண்மையே யாகும். வேளாண்மை என்பது பிறர்பாற் பரந்துபட்ட அன்பு. பிற நாட்டாரும் அன்பைப் பேணினும் அவ்வன்பு இரு வகையில் வரம்புபட்ட அன்பாகும். முதலில் தன்னலத்தாலும், இரண்டாவதாக ஆணவத்தாலும் அது தடைப்படும். தன்னலத்துட்படும்போது அவ்வன்பு ஆதாயம் கிடைக்கும் இடங்களில் மட்டுமே செலுத்தப்படும்; இழப்பு ஏற்படும் இடங்களில் விலக்கப்படும். இன்றைய சனாதனிகளிட முள்ள சனாதனத்தில் இவ் இயல்பை வேறு விதமாகக் காணலாம். ஆதாயம் வருமிடங்களில் இது முகங்காட்ட ாது; இழப்பு வருமிடங்களில் ஆரவாரத்துடன் முழங்கும் நிலையுடைய தாக விளங்கும். இரண்டாவதாக ஆணவத்திற்குட்பட்ட போது அது சற்று விரிந்த தன்னலமாகத் தன் உறவினர், தன் வகுப்பு, தன் நாடு, தன் சமயம் ஆகியவற்றுக்குள் நின்று விடுகின்றது.
தமிழரின் வேளாண்மைக்கு இத்தகைய வரம்பு இல்லை. அது கிட்டத்தட்ட கடவுளின் அருட்குணத்துக்கு அண்மை யுடையது. தன்னை அண்டினோர் யாவராயினும் வரையாது காடுக்கும் தன்மையது அவ் அன்பு அல்லது வேளாண்மை. வருபவன் தன் இனமாயினுஞ்சரி பிற இனமாயினுஞ்சரி, நண்பனாயினுஞ்சரி பகைவனாயினுஞ்சரி, ஏழையாயாயினுஞ்சரி செல்வனாயினுஞ்சரி, அவன் தன் வீடு தேடிவரின் அவனை விருந்தினனாகவே கொள்ள வேண்டுவது தமிழர் முறைமை. அது மேலீடாகக் கற்றுவந்த கடமை மட்டுமன்று; நெடுநாள் பழகி உள்ளத்தில் ஊறிப்போன பண்பாடு; அல்லது இயல்பு ஆகிவிட்டது.
இதனால், எல்வளவோ தீங்கு வந்தும் தமிழர்களை விட்டு இக் குணம் அகன்றபாடில்லை. இக் குணத்தால் அவர்கள் அறிஞர் போற்றும் தெய்வத் தன்மை மிக்க அருளாளராக விளங்கினும், உலகியல் வாழ்வில் அவர்கள்பட்ட, படும் இன்னல்கள் எண்ணுந்தரமன்று. “அருளிலார்க்கு அவ்வுலக மில்லை; பொருளிலார்க்கு இவ்வுலக மில்லாகி யாங்கு” என்று வள்ளுவர் மொழி என்றும் எவர்க்கும் பொய்க்காதன்றோ!
இவ்வுயர் பண்பு உடையவர் தமிழ்நாட்டின் வெளியிலும் சில வகுப்பார் உளர். அவரே வட இந்தியாவிலுள்ள இராஜபுத்திரரும், ஸ்காத்லந்து அயர்லந்து நாட்டினரும்,