பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இழிசொற்களைத் தாமே விரும்பி ஏற்றுத் தம் மூதாதையர் மேலும் விரும்பிச் சுமத்தும் அளவு, அவர்கள் தன் மதிப்பிழந்தும், தன்னுணர்வு இழந்தும் விட்டனர்.

இந்நிலைமை விரைவில் மாறித் தமிழர் வேளாண்மை

யோடு, வேளாண்மைக்கு

உடையவராதல் வேண்டும்.

மாறற்ற

தாளாண்மையும்

தமிழரின் இன்னொரு தனிப்பண்பு அவர்களது மான உணர்ச்சி. தன் மதிப்பிற் சிறிது குன்றினும் உயிரை விட்டுவிடும் மாவீரர் தமிழர். அத்தகைய நிலைமையில் உயிர்விடுவது தற்கொலை என்றே அவர்கள் கருதுவதில்லை.

இராஜபுத்திர

கணவனுடன் இறந்த கற்புடைய மாதர் தமிழ் மாதரும், தமிழருடன் நெருங்கிய உறவுடைய மாதருமேயன்றிப் பிறர் அல்லர். வடநாட்டில் இராஜபுத்திரரது வீரவழக்குப் பிற கோழைகள்மீது சுமத்தப்பட்டு உடன்கட்டை ஆயிற்று. தமிழரிடத்தில் இத்தகைய வற்புறுத்தல் இல்லை என்பதை அவர்களிடை மறுமணம் செய்யும் வகுப்பினர் அன்றேபோல் இன்றும் இருப்பதால் அறியலாம்.

இம் மான உணர்ச்சி இன்று வெற்றாரவாரமாக நின்று தமிழரிடை அழிவு செய்கின்றது. காரணம் இது தன்மதிப்புடன் கூடிய அன்பு நெறியினின்றும் விலகியதும், அன்புநெறியும் தாளாண்மையும் அற்ற ஒரு தன்னலக் கூட்டத்தாரின் சூழ்ச்சியுட் பட்டதுமேயாம்.

தமிழர் மான உணர்ச்சி அல்லது அதன் திரிபு ஆகிய ஆணவத்தினால் தூண்டப்பட்டு, ஒருவர்க்கொருவர் பிணங்கும் டங்களிலெல்லாம், அவர்கள் இயற்கை அன்பின் வசப்பட்டு மீண்டும் ஒன்றாய் இணங்கிவிடாமல், இப் பசுத்தோல் போர்த்த புலிக்கூட்டத்தினர் அவர்களை என்றும் பிரித்து வைக்கச் சூழ்ச்சிகள் வகுத்தனர்.

தமிழரிடம் உள்ள உண்மைச் சமய உணர்ச்சியினின்று பகுத்தறிவை அகற்றப் போலிச் சமய உணர்ச்சியை உண்டுபண்ணி வளர்த்து, அதன் மூலம், இவர்கள் தமிழர்களை என்றும் ஏய்த்துத் தின்ன வழிபார்த்தனர்.