பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் முழக்கம்

229

மேலும், தமிழர் பாகுபாடு தொழிற் பாகுபாடேயன்றிப் பிறப்பினால் உயர்வு தாழ்வுப் பாகுபாடுகளல்ல என்பதை இன்னொரு வழியில் காட்டலாம். தமிழர் நால் வகுப்புள்ளும் நாலாவதான வேளாளர் வகுப்பு ஒன்று தமிழ்நாட்டில் நாலாவது வகுப்பாயில்லை. எவ்வகையிலும் முதன்மையுடைய வகுப்பாகவே அஃது இருக்கின்றது. தமிழர் வேளாண்மைக்கு ஓர் இலக்காகவே இருக்கின்றவர் இன்றும் அவர் அன்றோ?

மற்றைய மூன்று வகுப்பாருக்கும்கூடத் தமிழர் இப்பெயரைச் சூட்டத் தயங்குவதில்லை. வணிகரிடைப் 'பூவைசியர்' என்பவர் வேளாளரே. ‘தனவைசியரும்' வேளாண்மையுடையவரே.

அரசருள் தமிழரிடை-குறுநில மன்னராயிருந்து சிறப்புற் றவர் 'வேளிர்' எனப்படுவர். 'வேளாளர், வேளிர்' என்ற இரண்டு சொல்லும் 'வேள்' என்ற பகுதியிலிருந்தே வந்தவை யாகும்.

‘வேள்' என்றால் கடவுள். முருகனுக்கு அது பெயராயிற்று. கடவுளை வழிபடும் வழிபாடே வேள்வி. கோவிலில் வழிபாடு செய்யும் ஒரு தமிழ் வகுப்பார் இன்றும் ன்றும் 'வேளார் எனப்படுகின்றனர். எனவே, 'வேளாளர்' என்ற சொல் அந்தணர்க்கும் உரியதாதல் காண்க.

அது மட்டுமன்று. இன்று தமிழ் நாட்டுச் சைவ வைணவக் கோவில்களிலே பூசை செய்ய உரிமை பெற்ற வகுப்பினரைப் பார்ப்பனர் ‘வேளாப் பார்ப்பார்' என்று கூறித், தம்முடன் சேர்க்காது விலக்கி வைக்கின்றனர். நக்கீரர் முதலியவரும் 'வேளாப் பார்ப்பார்' என்றே கூறப்படுகின்றனர். அவர்கள் ஊன் உண்ணாதவராதலின், வேள்வி (வடநாட்டு வேள்வியாகிய பலி) செய்யாதவர் என்ற பொருளில், அவர்கள் அங்ஙனம் பிரித்துக் கூறப்பட்டனர் போலும்!

கோவில் குருக்கள் பார்ப்பனரது ஆரிய மந்திரங்களை ஓதாமல், எங்கும் தமிழர் முறைப்படியே மந்திரமோதலின், அவர்களை ஆரியச்சார்பான பார்ப்பனர், தமிழ்ப் பார்ப்பார் என்ற முறையில், வேளாப் பார்ப்பார் என்று கூறியிருக்க வேண்டும்.நாலடியாரை 'வேளாண்வேதம்' என்று கூறிய