பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




230

அப்பாத்துரையம் - 1

இடத்தும், வேள் என்ற சொல் வேற்றுமை காட்டாது தமிழரைக் குறித்தல் காண்க.

இங்ஙனம் தொழிலாலும் பழக்கவழக்க மாறுபாட்டாலும், இயற்கையில் தமிழரிடையே வேற்றுமை இருந்த போதிலும், அதனை அவர்கள் பிறப்பு வேற்றுமையாகக் கொள்ளவுமில்லை. சமயத் தொடர்புபடுத்தவுமில்லை. தமிழரசரும் தமிழ்ச்செல்வரும் தம் நாட்டுக்கு வந்த அயல் மக்களைத் தம் மக்களிலும் மேம்படுத்தியதனால், அம் மக்கள் நிலைமறந்து, ஒண்டிய வீட்டிலிருந்துஉடையவரை இகழவும் தாழ்த்தவும் இடமேற்பட்டது.

அங்ஙனம் கெடுத்த பின்னரும்கூடத் தமிழர்க்கு இயற்கை யான வகுப்புப் பற்றற்ற தன்மை தமிழ் நாட்டிலுள்ள பெரியார் களின் வாழ்விலும் காணப்படுகிறது. மேலும், தமிழ் மக்கள் இன்றும் எச் சமயத்தினராயினும் பேதமின்றி மாதாகோவில், ஆண்டவர் பள்ளி முதலியவற்றுக்குச் சென்று பணிகின்றனர்.

அதே சமயம் பார்ப்பனர் தாம் மேற்கொள்ளும் - அல்லது மேற் கொள்வதாகச் சொல்லும் சமயத்துக்குள்ளேயே ஆழ்வார்கள், நாயன்மார்கள், வள்ளலார் ஆகியவர்களைப் போற்ற மறுப்பதும், தமிழ்நாட்டுக்குப் புறம்பே சென்று பிற மதத்தை அணைந்தவராயினும்கூடத் தம் கூட்டுறவுப் படையில் பிறந்தவர் என்பதற்காக, சாயிபாபா முதலியவர்களை, நம்பியோ நம்பாமலோ கொண்டாடுவதும் காண்க.

தமிழர் இன்னும் இக் கூட்டத்தாரைத் தம்மவரென்றோ அயலவர்-நண்பரும், பகைவரும் அற்ற பொது நிலையிலுள்ள வெளிநாட்டு மக்கள் என்றோ எண்ணி ஏமாறுகின்றனர். எம்மதமும் சார்ந்து கெடுக்கும் பகைவர்கள் அவர்கள் என்ற உண்மையை உணர்கின்றார்களில்லை.

சைவர்களும் வைணவர்களும் இவ்வாரிய வகுப்பினர் களுக்கு அடிவருடிகளாய்த் தம் தமிழின மக்களை அடிமைப் படுத்தித் தாழ்த்த ஒருப்பட்ட போதிலும்கூட, சுமார்த்தரும் வடகலையாரும் அச்சைவரும் வைணவரும் மேற்கொள்ளும் நாயன்மாரையும் ஆழ்வார்களையும் தலைவர் உட்பட மேற்கொள்ளத் தயங்குவதைக் காணலாம்.