பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் முழக்கம்

233

தாய்மொழியைத் தெய்வம் எனல் இயைபுடையதானால், தமிழர் தாய்மொழியாகிய தமிழைத் தெய்வம் எனல் ஆயிரமடங்கு இயைபுடையதாகும். ஏனெனில், தமிழ்மொழி மற்றெல்லா மொழிகளிலும் இயற்கையுடன் மிக நெருங்கிய உறவு உடையது. மொழிகளெல்லாம் இயற்கையன்னையின் பிள்ளை களானால், தமிழ் இயற்கையன்னையின் முழுமுதற் பிள்ளை என்னலாம். இதனை அதன் ஒலிகள், எழுத்துகள், இலக்கண இலக்கிய அமைதிகள் ஆகிய யாவற்றுள்ளும் பார்க்கலாம்.

தமிழின் ஒலிகள் அதிக முயற்சியின்றி ஒலிக்கப்படுபவை என்பதை நேரிடையாக ஒலித்தே அறியலாம். ஒலிகளைப் பதிவு செய்யும் பொறிகள் மூலம் அறிஞர் பா.வே.மாணிக்க நாயக்கர் அதனைக் காட்டியும் உள்ளனர்.

அதனுடன், உலக மொழிகள் ஒவ்வொன்றின் வரலாற்றையும் ஆராய்வோர் மொழிகள் இன்று மாறும் மாற்றம் எல்லாம் இறுதியில் தமிழ்த் தன்மையடையும் வகையிலேயே செல்கின்றன என்றுகாண்பர்.

இதற்கு ஆரிய மொழிகளும் விலக்கல்ல.

எப்படியெனில் வடமொழியில் மெய்யெழுத்துகளுள் கசடதப என்ற ஐந்து வல்லெழுத்திலும், ஒவ்வொன்றிலும் நான்கு எழுத்துகள் உண்டு. அந்நான்கையும் அவ்வற்றுக்கினமான ஙஞணநம என்ற மெல்லெழுத்து களையும் ஐவர்க்கம் என்பர். இவ் ஐவர்க்கங்களுள் முதலாவதும் மூன்றாவதும் மட்டுமே இயற்கை ஒலிகளாம். ஏனெனில், இரட்டித்து வருமிடங்களிலெல்லாம் இவ்விரண்டாவதும் நான்காவதும் மாறி, ஒன்றாவதும் மூன்றாவதும் ஆகின்றன.

உயிர்க்கிடைப்பட்ட

வன்மை

மேலும், இரண்டு மென்மையாதலும், இடைபோன்று ஒலித்தலும் கெடலும் தமிழில் காணலாம். எடுத்துக்காட்டாக ‘மாதம்' என்ற சொல்லின் இடையிலுள்ள ‘த’ கரம் ‘திட்டம்' என்ற சொல்லில் உள்ள ‘த’ கரம் போல ஒலிக்காமல் இடையெழுத்துப்போல் ஒலித்தல் காண்க. 'தேசம்' என்ற சொல் தேயம் என இடையாகி, அவ் இடையெழுத்தும் கெட்டுத் 'தேம்' எனப் பழைய நூல்களில் வருவது காணலாம்.