234
அப்பாத்துரையம் - 1
இம் மாறுபாடு தெலுங்கிலும் மலையாளத்திலும் மலிந்திருப்பது அவை தமிழினத்தைச் சேர்ந்தவை, வடமொழியைச் சேர்ந்தவை அல்ல என்பதைக் காட்டுகின்றது. வடமொழியில் 'மாதா' என்ற சொல் தமிழில் மாத்தா என்றெழுதி விரைவாக வாசித்ததுபோல் ஒலிக்கும். ஆனால், மலையாளத்தில் அங்ஙனம் ஒலிக்காமல் தமிழ் போலவே ஒலிக்கின்றது காண்க.
அது மட்டுமன்று; வடமொழியில் இல்லாத இவ் இயல்பு வடநாட்டுத் தாய்மொழிகளாகிய பண்டைய பாளி, பாகதங்கள், தற்கால இந்தி முதலிய மொழிகளில் காணப்படுகின்றன. பிற நாட்டு மொழிகளிலும் அருகலாக இவை காணப்படாமலில்லை. வடமொழியில் ஆரிய புத்திர என்ற சொல், பாகதத்தில் அஜ்ஜவுத்த என வருவதும், பகினீ என்ற வடசொல் பகினீ என இந்தியில் வருவதும் இவற்றுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
மற்றும் மொழி முதலில் இரு மெய்கள் வாராமை, இடையில் பெரும்பாலும் மூன்று மெய்கள் முதலிய கடுந்தொடர்கள் வாராமை, இறுதியில் மெய்கள், சிறப்பாக வல்லினங்கள் வாராமை ஆகிய வகைகளில் ஆரியமொழிக்கு முன்னிருந்தே ஐரோப்பாவில் வழங்கிய உருசிய, பின்னிசிய, ஹங்கேரிய மொழிகள் தமிழ்க் குழுவுடன் ஒத்திருக்கின்றன. இந்தியாவிலும் பாளி பாகதச் சிதைவுகள் இவ்வகையில் தமிழை அண்டியே வந்துள்ளன. ப்ரக்ருதி என்பது பகுதி எனவும், ப்ரியதர்ஸி என்பது பியதஸ்ஸி எனவும் மாறுதல் இதனை வலியுறுத்தும்.
க
இலக்கணத்திலும் பல விதிகள் இயற்கை விதிகளோ என்னும்படி அமைந்துள்ளன. "உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவதியல்பே" என்ற உயிர்மெய் இயல்பு கூறும் நன்னூல் சூத்திரமும், “வன்மை சார்ந்த மென்மை வன்மைக் கினமாகத் திரியும்” என்ற விதியும், தமிழ்க்கு மட்டுமின்றி உலகியல்புக்கே லக்கணமாதல் காண்க. இரண்டு உயிர்கள் கலத்தலால் டையிட்டுவரும் யகர வகர மெய்களை உடன்படுமெய் என்று சொல்லாமல் உடம்படுமெய் என்றே கூறியதும் இதன்பாற்படும். உயிர்க்கு உடம்பாக வந்த மெய் என்ற தத்துவத்தை இது உணர்த்தி நிற்கும். மேலும் ஐம்பூதச் சேர்க்கையால் ஏற்பட்ட