பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் முழக்கம்

235

உலகத்தை ஒத்துத் தமிழ் இலக்கணம் ஐந்திலக்கணமாகவும், தமிழிலக்கியம் ஐந்திணை நெறிப்பட்டதாகவும் அமைந்தன என்றுங் கூறலாம்.

சொல் ஒழுங்கு, வாசக ஒழுங்கு முதலியவற்றை எடுத்துக் கொண்டாலும், தமிழின் இயற்கை வாய்ப்பு நன்கு புலனாகும். எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்றில் வாக்கியம் முடிவது; பயனிலையிலாயினும் ஆங்கிலம் முதலிய பல மொழிகளும் பயனிலை இடையில் அமைந்துவிடுகிறது. செயப்படுபொருள், பயனிலை கொண்டு முடியும் வேற்றுமைத் தொடர்கள், உரிச்சொற்கள், சார்பு வாசகங்கள் முதலிய யாவும் பின் சேர்க்கையாக வருகின்றன. தமிழ்க்குழு இச் செயற்கைப் புரளிகளற்று விளங்குகிறது.

மேலும், திணை, பால் முதலிய பாகுபாடுகள் ஆரிய மொழிகளுள் பகுத்தறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் ஒவ்வாத "ரசாபாச" முறையில் அமைந் துள்ளன. எடுத்துக்காட்டாக, மனைவி என்ற பெண்பாற் பொருளுக்கு 'தாரா' என்ற ஆண்பாற் சொல்லும், ‘களத்ரம்' என்ற அஃறிணை ஒன்றன்பால் சொல்லும், ‘பார்யா' என்ற பெண்பால் சொல்லும் ஒருங்கே வழங்குகின்றன. இவற்றுள் முதல் சொல்லாகிய தாரா -என்பதில் பெண்ணை ஆணாக மயங்கிய பால் மயக்கத்தோடு இன்னொரு மயக்கமும் அமைந்துள்ளது. ஏனெனில், மனைவி என்ற ஒருமை எண்ணுப் பொருளைக் குறிக்க வந்த இச்சொல் எப்படியோ இலக்கணத்தில் பன்மையாகக் கருதப்படுகின்றது. மூன்றாவது சொல்லாகிய களத்ரமோ பால் மாறாட்டத்துடன் நில்லாமல் திணை மாறாட்டமும் உண்டுபண்ணுகிறது.

ஆரிய மொழிகளிலுள்ள இம்மயக்கம், அவற்றின் வழி வழிப் பிள்ளைகளிடம் குறைந்துவரினும், இன்றளவும் முற்றிலும் மறைந்துவிடவில்லை. இந்தி, வங்காளி முதலிய இந்திய மொழிகளும், ஜெருமன், பிரெஞ்சு முதலிய ஐரோப்பிய மொழிகளும் இவ்விடர்ப்பாட்டினால் இன்னும் முட்டுப்படவே செய்கின்றன. ஆரிய மொழிகளுள் இக்கறையை ஒழித்த தற்கால மொழி ஆங்கிலமொன்றே - அதுவும் அண்மையில் பதினாறாம் நூற்றாண்டி லேயேயாகும். ஆனால், தமிழும் தமிழ்க்குழு மொழிகளும் தொன்றுதொட்டு நேரிய திணைப் பாகுபாடுக உடையவையாய்ச் சிறப்புற்றோங்கி உள்ளன.

களை