(236) ||-
அப்பாத்துரையம் - 1
அன்றியும், பலவகையில் தமிழ் இலக்கணம் இயற்கை அமைவுடை யதென்று காட்டலாகும். யாப்பிலக்கணத்தில் சீர் தளைக்காகச் சொற்கள் அருவருக்கத்தக்க முறையில் சிதைக்கப் படாததும்,தெளிந்த பொருளற்ற சொற்கள் தமிழிற்கிடையாததும் கவனிக்கத்தக்கது. நான் ஒருவரையும் காணவில்லை என்பதற்கு, 'நான் கண்டது யாருமிலர்' என்றும் 'நான் ஒரு மனிதனையும் காணவில்லை' என்பதற்கு, 'நான் கண்டது மனிதனல்லாதவன்' என்றும் தமிழில் கூறுவதில்லை. மேலும் செயலைக் காட்டாத வினைகளைத் தமிழ் முற்றிலும் ஒடுக்கியோ அல்லது பொதுப்பட அஃறிணை முடிவு கொடுத்தோ கூறும் நயம் உலக மொழியாராய்ச்சியாளரால் பெரிதும் பாராட்டத்தக்கது. எடுத்துக்காட்டாக 'சாத்தன் மனிதனாயிருக்கிறான்' என்ற ஆங்கிலத் தொடரைத் தமிழ், 'சாத்தன் மனிதன்' எனச் சுருக்கிவிடுகிறது. “சாத்தன் எழுதுகோலைப் பெற்றிருக்கிறான்” என்ற தொடரைச் “சாத்தனுக்கு எழுதுகோல் உண்டு” அல்லது 'சாத்தனிடம் எழுதுகோல் உளது' என்று கூறுகிறது. இவ்வாசகங்களில் சாத்தன் செயல் யாதொன்றுமில்லை என்பதையும், அஃறிணைப்பொருள் செயலற்ற வினைக்கு கு எழுவாயாக வருதல் பொருத்தம் என்பதும் காண்க.
இதுகாறும் தமிழ் இயற்கை மொழியெனக் காட்டினோம். இது யாவரும் ஒப்ப முடிந்தது. இத்துடன் தமிழரிடையே சமயப் பற்றுடையவரும் தம் சமயத்துக்கும் தமிழுக்கும் இன்றியமையாத் தொடர்பு உண்டு என்று உறுதி கொள்கின்றனர். நிலைத்துவிட்ட வடவர் கூட்டத்தார், பல்லாயிரம் ஆண்டுகள் முயன்றும் தமிழரின் அவ் உறுதி இன்னும் சற்றுங் குலைந்துவிடாம லிருக்கிறது.
இனித் தெய்விகத் தன்மை, அதாவது சமயத் தொடர்பு வகையில் தமிழின் நிலை, யாதென நோக்குவோம்.
சைவ சமயத்தினர்க்கு வடமொழி வேதத்துக்கு மாறாகத் தேவாரம், திருவாசகம் முதலிய திருமுறைகள் தமிழிலேயே உள்ளன. வைணவர்க்கும் தமிழிலேயே நாலாயிரப் பிரபந்தங்கள் உள்ளன. சைவ சமயத் தலைவர்களான சமயாசாரியர் நால்வரும், சந்தானாசாரியர் நால்வரும் தமிழ்நாட்டிலேயே பிறந்து, தமிழிலேயே பாடியுள்ளனர். தமிழோடு வடமொழி நீங்கலாக