அப்பாத்துரையம் - 1
(238) || என்று, அதன் பெருமையினைக் கூறியுள்ளனர். ஆனால், முதல் பாட்டுத் தமிழின் பெருமையை மட்டும் கூற, இரண்டாம் பாட்டு அதனை டமொழியுடன் அண்டை கொடுத்து ஒப்புமை கூறமுயலுகிறது. பாட்டின் தொனியை நோக்கினால், அவ் ஒப்புமைகூட உபசார ஒப்புமையோ அல்லது, பரிந்து பேசும் மழுப்பல் உரையோ என்று தோற்றும்படி அமைந்திருக்கிறது. உண்மையில் அப்படித்தானா? அன்றெனில், அப்படி அந்நூலார் கூறுவானேன் என்று ஆராய்வோம்.
இரண்டாம் பாட்டிலிருந்து தமிழின் இலக்கணமான அகத்தியம் வடமொழியின் இலக்கணமான பாணினியத்தின் காலத்தில் செய்யப்பட்டது என்றும், ஆனால் இரண்டிலும் முந்தியது பாணினியமே என்றும் தோன்றும்.
அகத்தியம் அகத்தியனாரால் இயற்றப்பட்டது. தொல் காப்பியர் இயற்றிய நூல் தொல்காப்பியம். இவர் அகத்தியர் மாணாக்கருள் ஒருவரெனவுங் கூறப்படுவர். அகத்தியம் முதற்சங்க காலத்திலும் தொல்காப்பியம் இடைச் சங்க காலத்திலும் அரங்கேற்றப்பட்டன என்று பழைய நூல்கள் கூறுகின்றன. இடைச் சங்கம் இரண்டாம் ஊழியிலும், முதற் சங்கம் முதல் ஊழியிலும் இருந்தனவாம். அப்படியாயின் தொல்காப்பியம் அகத்தியத்துக்கு மிகவும் ஓர் - ஊழிவரை கூடப் பிற்பட்டதா? தொல்காப்பியர் அகத்தியர் மாணாக்கராயினுங்கூடத் தொல் காப்பியம் அகத்தியத்துக்குப் பிற்பட்டதே என்பதில் ஐயமில்லை.
தொல்காப்பியப் பாயிரத்தில், ஆசிரியரைப் பாயிரக்காரர் "ஐந்திர நிறைந்த தொல்காப்பியன்" எனக் கூறியிருக்கிறார். பாயிரம் நூலினும் பிற்பட்டது. ஆசிரியர் சிறப்புக்கூறவே அவர் ‘வடமொழிப்புலமை' யுடைமையும் கூறப்பட்டது. அஃது ஒருகால் புனைந்துரையும் மிகைப்பாடும் உடையதாகவே இருத்தலுங் கூடும்.இந்நிலையில், வடமொழியாளரிடையில் முதன்மையுடைய தாகக் கூறப்படும் பாணினியத்தைக் கூறாமல், "ஐந்திர நிறைந்த எனக் கூறுவானேன்? இவ் வினாவுக்கு உரையாசிரியர் நச்சினார்க்கினியர் அளிக்கும் விடையை நோக்குவோம். ஐந்திரம் பாணினியத்துக்கு நெடுநாள் முந்திய நூல்; தொல்காப்பியர் பாணினிக்கு முன் இருந்தவரானதால், பாணினியைப் பயிலாமல் ஐந்திரம் பயின்றிருத்தல் வேண்டும். இன்னும் ஓரிடத்தில்