தமிழ் முழக்கம்
239
நச்சினார்க்கினியர் தொல்காப்பியர் வேதங்களை வகுத்த வியாசர்க்குக்கூட முந்தியவர் என்று குறிப்பிடுகிறார்.
எப்படியும் தொல்காப்பியர் பாணினிக்கு முந்தியவர் என்பதை அந்நூல் நடையே காட்டும். பாணினி காலம் சூத்திரக்காலம் எனப்படும். இக்காலத்தில் செய்யுள் நடை அவாய் நிலைகளும் குறிப்புச் சொற்களும் குறியீடுகளும் பல்கிச் செறிவுடையதாயிற்று. ஆனால், அக்காலத்துக்கு முந்திய நடையோ சுருக்கத் துக்காக எளிமை இனிமை தெளிவு முதலிய பண்புகளை விட்டுக்கொடுக்காத நேரிய சூத்திர நடையா யிருந்தது. தொல்காப்பிய நடையும் இப்பழைய நடையைப் போலவே வேண்டிய அளவு விரிவும் நெகிழ்ச்சியும் உடையதா யிருக்கின்றது. தொன்னூல், நன்னூல் முதலியவற்றின் சூத்திர நடையைத் தொல்காப்பியத்துடன் ஒப்பிட்டால், இதனை நன்கறியலாம்.நன்னூலார்"பெயரும் வினையும் புணருங்காலை” என்று ஒரு வரியிற்கூறும் செய்தியைத் தொல்காப்பியர்;
"பெயரும் பெயரும் புணரும் காலையும் பெயரும் வினையும் புணரும் காலையும்
வினையும் பெயரும் புணரும் காலையும்
வினையும் வினையும் புணரும் காலையும் என்று இந்நான் கிடனும்”
என்பர். ஆகவே, தொல்காப்பியர் நடை பாணினியின் வைர நடைப்பித்து ஏறுமுன் எழுந்த சுருங்கிய இழுமெனும் தெள்ளிய நடையாம் என்க.
இங்ஙனம் தொல்காப்பியம் பாணினியத்திற்கு முந்தியதா யிருக்க, மேற்கூறிய பாட்டில் தொல்காப்பியரின் ஆசிரியராகிய அகத்தியரையே பாணினிக்குப் பிந்தியவராகக் குறிப்பிட்டிருக் கிறதே? இது பொருத்தமற்ற தல்லவா? இத்தகைய புரட்டுத் தோன்றியதேன்? வடமொழிப் பற்றுடையார் மெல்ல மெல்லத் தமிழை அதன் உயர் நிலையினின்றும் தணித்து வடமொழியை உயர்த்தும் முயற்சிகளுள் ஒன்றே இதுவும்.
அகத்தியர்க்கும் பாணினிக்கும் இருமொழி இலக்கணமும் அருளிய தெய்வம் சிவபெருமான் என்று கூறப்படுகின்றது.