(240)
அப்பாத்துரையம் - 1
“இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குர வரியல் வாய்ப்ப இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்த ரிசைபரப்பும் இருமொழியு மான்றவரே தழீஇயினா ரென்றாலிவ்
இருமொழியு நிகரென்னு மிதற்கைய முளதேயோ!"
என்ற பாட்டுக் காண்க. ஆனால், அகத்தியர் வருமுன் தமிழ்நாடு சங்கமும் இலக்கிய வளமும் பெற்றிருந்தது. அதில் அகத்தியர் மட்டுமன்று, அச் சிவபெருமானே வந்து தமிழாராய்ந்தார். அவ்வப்போது நேரிடையாகவோ, உருவத் திருமேனி எடுத்தோ, பாடியும் உரை கூறியும் வாதாடியுங்கூட வந்தனர் என்றெல்லாம் புராணங்கள் பேசுகின்றன. ஆதலால்,
"கண்ணுதற் பெருங்கடவுளுங் கழகமோ டமர்ந்து பண்ணுறத் தெரிந்தாய்ந்த இப்பசுந்தமி ழேனை மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணி டப்படக் கிடந்ததா யெண்ணவும் படுமோ!”
என்று புராணிகர் வீறு கொள்கிறார். சிவபெருமான் வட மொழிக் கருளிய இலக்கணம் சங்கம் கண்டதா? அதில் சிவனார் இருந்து மொழியாராய்ந்தாரா? பாடினாரா? நமக்குத் தெரியாது.
பாணினியின் முதல் சூத்திரங்களுக்கு மட்டும் பரமசிவன் உடுக்கை அடித்து ஒலி எழுப்பினார் என்ற அழகிய கதை உள்ளது. வேறு வடமொழியை அவர் ஆராய்ந்ததாகவோ, அதில் பாடியதாகவோ எங்கும் கேள்விப்படவில்லை.
பரமசிவன் அம்பலத்திலாடியதாகக் கூறும் இடங்களிரண்டு, பொன்னம்பலம் சிதம்பரத்தில், வெள்ளியம்பலம் மதுரையில், மூன்றாவது செப்பம்பலம் என ஒன்றுண்டாம்; அதுகூடத் திருநெல்வேலியிலாம். அனைத்தும் தமிழ் நாட்டிலே. உலகின் இதய இடம் சிதம்பரம், புருவ மய்யம் மதுரை என்கிறார்கள்; இரண்டும் தமிழ்நாட்டிலே அடி முடி தேடியது, காலனை உதைத்தது முதலிய புராணச் செய்திகள் நிகழ்ந்தது எனக் கூறுவதும் தமிழ்நாட்டிலேதான். முருகன் படை வீடு ஆறும் இங்கேயே. வைணவமும், மாயாவாதம் அல்லது ஸ்மார்த்தமும் தோன்றியதுகூடத் தமிழ்நாட்டில். சிவபிரான் அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் அருளிச்செய்தது தமிழரின் மதுரையில்.