பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் - 1

242 | மேலும் இராமன் கதை, கண்ணன் கதை, வடநாட்டினும் மிகுதியாகத் தென்னாட்டிலேயே வழங்கிவருகிறது. சங்க இலக்கியங்களில் இக்கதைகள் குறிப்பிடப்படும் அளவு, அதே காலத்திலுள்ள வடமொழி இலக்கியங்களில் குறிப்பிடப்பட வில்லை. தன்னாட்டுக் கண்ணனுக் கு வடநாட்டில் காணப்படாத தோழி ஒருத்தி ஏற்பட்டிருந்தாள். அவளே நப்பின்னைப் பிராட்டியாவாள். மற்றும் குகன் கதை, சவரி கதை, ஏகலைவன் கதை முதலிய தமிழ்க் கதைகள் இவர்கள் கதைகளுள் விரவியிருப்பதும், இவை வடமொழியாளரிடம் மட்டுமின்றிச் சமண பௌத்தரிடமும் சாவக நாட்டினரிடமும் வழங்குவதும், கிரேக்கர், உரோமர், பாரசீகர் முதலியவரிடம் இவற்றை யொத்த கதைகள் வழங்குவதும், இக்கதைகளின் மாபெரும் பழைமையினையும், இக் கதைகள் ஆரியச் சார்புக்கு முந்தியது என்பதையும் காட்டும். அதாவது ஆரியர் வருமுன் வடநாட்டில் வாழ்ந்த தமிழரிடையே வழங்கிய இக்கதைகள், இந்நாட்டின் பிற கதைகளைப் போலவே உலகெங்கும் சென்று பரந்திருத்தல் வேண்டும். மேலும் இன்று தமிழ்நாட்டில் இக் கதைகளின் மீது பற்றுதல் கொண்டு அவற்றின் வயப்பட்டு மயங்கிப் பணப்பையை அவிழ்ப்பவர் தமிழரே என்றும், அக்கதையைவிடப் பணப்பையில் மிகுதியான பற்றுக் கொண்டு, பிறரிடம் பக்தி ரசமும் பாவமும் கனிந்த சமயம் பார்த்து, அப் பணப்பையைத் தம் மடியில் கட்டுபவர் ஆரியரே என்றும் காண்க.

சிவபிரான் கதை திருமால் கதை ஆயிற்று - தமிழ்க் கடவுளான முருகனைப் பற்றியோ கூறவேண்டுவதில்லை. சிவபிரானிடமிருந்து தமிழ்க் கனியும் பெற்றுக் கலந்துகொண்டவர் அவர். அத் தமிழ் உண்ட வீறினால்போலும் அவர் வடமறை அருளிய வானவனைக் குட்டிச் சிறையிலிட்டதும்! அதுமட்டுமா? அவ்விளந்தமிழ் வீறு, பழந்தமிழ் ஐயனாம் பரமனைக்கூடப் பணிய வைத்ததாம். அச்சிவனார் செய்த குற்றம் வடமொழியாளர்க்கு ஆதரவு செய்ததுதான் போலும்!

சிவபிரான், திருமால், முருகன் ஆகியோர் தமிழர் வகுத்த தெய்வங்களே எனக் கண்டோம்.

மேற் கூறிய தமிழ்த் தெய்வங்களனைத்தையும் இன்று தமிழர் தமிழ் நாட்டில் மட்டுமின்றி வடநாட்டிலும்

-