பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(244) ||

அப்பாத்துரையம் 1

கடவுள் எல்லா மதத்துக்கும் அப்பாற்பட்டவர், அல்லது சமயங் கடந்தவர் என்றும் கொண்டுள்ளனர். அது மட்டுமன்று; பல சமயங்கள் கடவுளுக்கு மனித வடிவு கற்பித்து மனிதத் தன்மையும் சூட்டியுள்ளன. சில இன்னும் ஒருபடி தாண்டி மக்களின் இருபாலாருள், கல்வி உலகில் மேம்பட்ட ஆண்பாலாகவே கடவுள் உருவை அமைத்துள்ளன. தமிழர் மட்டுமே கடவுளை ஆணாக மட்டுமின்றிப் பெண்ணாகவும் கற்பனை செய்துள்ளனர். தமிழர்க்கடுத்தபடி உலகின் மிகப் பழைய நாகரிகங்களான எகிப்திய, அகியானிய (Aegean Civilisation), அசிரிய நாகரிகங்களும் கடவுளை அன்னை வடிவில் வணங்கியுள்ளன. சைவர், இரண்டை இரண்டையும் ஒன்றுபடுத்தி அம்மையப்பனாகக் கருதினர் போலும்.

ஆனால், தமிழர் பால்பாகுபாடு மட்டுமின்றித் திணை வேறுபாடும் கடந்து, கடவுளைத் திணை பால்பகாப் பொதுப் பெயராக்கிச் சிவம் என்றும், பண்பு கடந்த அறிவுப்பொருளாகிய கந்தம் அல்லது இலிங்கம் என்றும், தத்துவங் கடந்த அகண்ட பொருளாகிய கடவுள் அல்லது கந்தழி என்றும் பாவித்தனர். இவற்றுள் கடைசியிற் காட்டிய சொற்கள், வேதாந்த சித்தாந்தத்தின் முடிந்த உண்மையினைக் காட்டும் இயற்பெயராய் அமைந்துள்ளமை காண்க. வடமொழியில் இதற்கு இயற்பெயர் ல்லை என்றும் காணலாம். தமிழர் அருவப்பொருளைத் தம் தெய்வத்தின் பெயராகிய சிவன் என்பதன் ஒன்றன்பால் வடிவாகக் குறித்ததுபோல, வடமொழியாளர் தம் தெய்வமாகிய பிரம்மாவின் அஃறிணை வடிவமாகிய ‘பிரமம்' என்ற சொல்லைப் புனைந்துகொண்டனர். அஃது ஒன்றே, இச்சொற் குறிக்கும் கருத்துகள் தமிழருடையன என்று காட்டும்.

இறுதியாக, தமிழ் தெய்வ மொழியாயின் வட மொழிக்குத் ‘தேவபாடை' என்ற வழக்கு ஏற்படுவானேன் என்ற ஒரு கேள்வி எழலாம். வடமொழிக்குத் தேவபாடை என்ற வழக்கு கம்பர் காலத்துக்குப் பிற்பட்டது. இக்காலத்து நூலெழுதியவர், சமய விளம்பரத்துக்கான நூல்கள் இயற்றி அவற்றை இலக்கியத்தின் பேராலும், கலையின் பேராலும் வழக்காற்றிற் புகுத்த முயன்றவர்கள். பகுத்தறிவு மூலம் பொதுமக்களைக் காண முடியாத இடத்தில், இன்றும் போலி அறிஞர் பலர்