தமிழ் முழக்கம்
245
மக்களிடையே அறியப்படாது பிறிதொரு மொழியில் இன்ன நூலுளது, பிறிதொரு நாட்டார் இன்னது சொல்கின்றனர் எனத் தம் அறியாமையையும், தம் ஆராய்ச்சி ஆற்றலின்மையையும் மறைப்பது வழக்க மல்லவா? அது குறித்தே தாயுமானவரும், "தென்மொழிப் புலவரிடை வடமொழிப் புகழ் பாடுவேன், வடமொழிப் புலவர் வரில் தென்மொழி பாடுவேன்” என்றனர். அதே முறையில் பொதுமக்கள் அறிவை மயக்க, அவர்கள் நன்கு பயிலாத ஒரு மொழியைப் பயன்படுத்தினர், கற்றறிந்தார் என்று பிறநாட்டு மன்னர் அல்லது, பிறநாட்டு மக்களிடமிருந்து நற்சான்று பெற விரும்பிய கூட்டத்தார்.
எங்ஙனம் உயர்த்துவதற்கு வடமொழியை எடுத்துக் கொண்டதன் காரணம், அது வேறு யாரும் பேசாத உயிரற்ற மொழி என்பதேயாகும். இம்மொழியில் இம்மொழியில் தமிழிலும் பிறமொழியிலும் உள்ள நூல்களைப் பெயர்த் தெழுதிக்கொண்டு, அவ்வத்தாய்மொழி நூல்களை ஒழிப்பதன்மூலம் அதனை உயர்த்த முயன்றனர். இதற்கு வடமொழியிலேயே சான்றுகள் பல உள்ளன. காசுமீர நாட்டில் பேசப்பட்ட ஒரு மொழியில் ஏற்பட்ட 'பில்கணனது பெருங்கதையை, வடமொழியில் மொழி பெயர்த்துக் கொண்டனர். பின் முதன்மொழி நூல் ஒழிய, வடமொழி நூலே இன்று வாழ்கின்றது. இதுபோலத் தமிழ்நாட்டிலும் நிலவுதல் இயற்கைதானே. தமிழின் பரந்த இலக்கண இலக்கியம், அறிவியல், கலை வளங்கள் வடமொழியை வண்மைப்படுத்தப் பயன்பட்டிருத்தல் வேண்டும் எனக் காட்டலாம்.அறிவியலுள் ஒன்றான யானையேற்றத்தை எடுத்துக் கொள்வோம். யானைகள் இன்றும், அன்றும் மிகுந்துள்ளமை தென் இந்தியாவிலேயன்றி வட இந்தியாவிலன்று. யானைக்கு வடமொழியில் சரியான பெயர்கூடக் கிடையாது. ஆரியர் அதனைக் கண்டபோது, அதன் புதுமை நோக்கி அதற்கு 'ஹஸ்தி' 'அஸ்தம்' அல்லது கையையுடையது எனக் காரணப்பெயர் தந்தனர். அத்துடன், இன்றும் யானைப்பயிற்சி செய்பவர் எங்கும் மலையாளிகளேயாவர்.ஆகவே, யானை பற்றிய நூல் மலையாளம் அல்லது தமிழில் இருப்பதன்றோ இயல்பு? ஆனால், இன்று மட்டுமின்றி முன்னாளிலும் அது வடமொழியிலேயே இருந்தது என்று கூறுகின்றனர். இஃது எதனால்? யானையில்லா நாட்டு மொழியில், யானைக்குப் பெயர்கூடச் சரியாக அமையாத ஒரு