பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழியில் யானையின் தேர்ச்சியாளர் எழுதிய நூல் இருப்பது எதைக் காட்டுகிறது? அதை எழுதியவர் வடமொழி நூல்களில் பெரும்பகுதியை எழுதியவரைப் போலவே, தமிழர் என்று காட்டவில்லையா? தொழில் நுட்பம் நிறைந்த இதுபோன்ற கலைகள் பலவும், பொது மக்களால் எளிதில் கவரப்படா திருப்பதற்காகவும், பொது மக்களால் மதிக்கப்படுவதற்காகவுமே வடமொழியில் எழுதப்பட்டன என்பர். சமய வாழ்வுப் பகுதிகளிலும் எல்லா மக்களுக்கும் தெரியக் கூடாதென்று மறைக்க வேண்டிய செய்திகளெல்லாம் - ஒரு குலத்துக்கு ஒரு நீதியான அறநெறிகள் கட்டுப்பாடான ஏமாற்று முறைகள் ஆகியவற்றுக்கெல்லாம், வடமொழி குழூஉக் குறியாய் அமைந்தது. நம் நாட்டில், இன்றும் குடியரிடையேயும், திருடரிடையேயும், நாடோடிச் சாமியார்களிடையேயும் பொதுப்படையான கருத்துகளைக் குறிக்கக் குழூஉக்குறிகள் வழக்கிலிருப்பதைக் காணலாம். இவற்றுக்கு அவர்கள் வேடிக்கையாக 'சமற்கிருதம்' என்றும் 'இத்தாலி மொழி' என்றும் கூறுவர். இத்துடன் பாமர மக்களையும், அவரிடையே பணத்தால், அறிவால், ஆற்றலால் மக்களையும் வேறுவேறு பிரித்து வைக்கவும், இத்தகைய அயல் மொழி பயன்பட்டது. இன்று ஆங்கிலம் அத்தகைய அயல்மொழியாக நின்று பயன்படுகிறது. ஆங்கிலம் மட்டும் சமய மொழியாக்கப்பட்டுப் பார்ப்பனர் ஏகபோக உரிமையாய் இருந்திருந்தால், அது வடமொழி போலவே அவர்களுக்கு முழுப்பயன் அளித்திருக்கும். அதனைவிட்டு இந்திமொழியைக் கொண்டு வரவும் அவர்கள் முயன்றிருக்க மாட்டார்கள். ஆகையால்தான், ஆங்கிலம் இந்தி தெலுங்கு முதலிய அயல்மொழிகள் தமிழ் நாட்டுப் பார்ப்பனர்க்கு டது கையாக நின்று உதவியும், வடமொழிபோல் வல துகை யாய் நின்று உதவுவதற்கில்லை. இந் நுட்பமறிந்த காரணத்தினால் தான், பார்ப்பனத் தலைவர்கள், ஆங்கிலமும் இந்தியும் வரினும், வடமொழியும்கூட இருப்பது இன்றியமையாதது வற்புறுத்திவருகின்றனர்.

வடமொழி தெய்வமொழி என்பார் கூற்று எழுந்தவாறு கூறினோம். ஆனால், தீயில்லாமற் புகையுண்டாகாது என்றபடி, வடமொழி தெய்விகமொழி எனப் புகன்றவர், “தெய்விக மொழி” என்ற கருத்துக் கொள்ள முன் வழக்கு இருந்திருத்தல் வேண்டும்.