பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னமேயே தமிழரிடை நாலு வேதங்களிருந்தன என்று கூறுதல் தவறன்று. அவ்வேதங்கள் ஏன் அழிந்துபட்டன என்ற கடாவுக்கு விடை எளிது. அவை என்றேனும் எழுதப்பட்டிருந்தாலன்றோ றவாதிருக்கும்? அவை வாயுரையால்கூடக் கூறப்படாமல் குறிப்புரைகளால் கூறப்பட்டுப் பரம்பரையாய் வந்தன. பின்னாளில் குறளும் திருவாசக திருமந்திரங்களும் இவற்றின் வழிநூல்களாயமைந்தன. வேதங்கள் வடமொழியில் முதனூலாயிராது மொழிபெயர்ப்பா யிருந்ததனால் தான், அதன் கருத்துகள் அங்கே மேன்மேலும் வளரவோ புதுப்புது நூல்களாய்த் தளிர்க்கவோ முடியாததாயிற்று.

தமிழிலக்கணத்தில் தொல்காப்பியம் முதல், அதற்கு முன்னிருந்துங்கூட, எல்லா இலக்கணங்களிலும் மேற்கோளாய் எடுத்தாளப்பட்ட சில பழஞ் சூத்திரங்கள் இதனை வலியுறுத்தும், தமிழ் நூல்கள் முதல், வழி என இரண்டாகவும், பின் நாள்களில் முதல், வழி, சார்பு என மூன்றாகவும் வகுக்கப்பட்டன. முதல் நூலுக்கு விதியாக அமைந்த பழஞ்சூத்திரம்,

“வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல் நூலாகும்"

என்பதாம். இதன் பொருள் 'இருவினைப் பற்றற்ற, முழு அறிவுடைய முதல்வன் கண்டதே முதல் நூல்' என்பதாகும். சூத்திரத்தின் பொருள் நம்மைத் திடுக்கிடச் செய்யத்தக்கது.

தனை அறிந்துதானோ என்னவோ, உரையாசிரியர் உரையிற் கோடலாக 'இறைவன் என்றாராயினும் இறைவனை ஒத்த பெரியாரையும் உடன்கொள்க' என்று பொருள் விரித்தார். எப்படியும் கடவுளோ, கடவுளோடொத்த முழுமுதல் முனிவரோ நேரனுபவத்தால் கண்டது முதனூல் என்றாயிற்று. உரையாசிரியர் இதற்கு வேத ஆகமங்களை மேற்கோள் காட்டுகிறார். அப்படியாயின் அவர் குறித்த வேதாகமம் யாவை? வடமொழி வேதாகமமோ வெனின், அது பொருந்தாது. தமிழிலக்கண மெழுதுவோர் தமிழ்மொழிக்கும் தமிழிலக்கியத்துக்கும் இலக்கணம் எழுதினரேயன்றி வேறு எம்மொழிக்குமன்று. எனவே, இச் சூத்திரங்கள் ஏற்பட்ட காலத்து, வாய்மொழியாக வேதாகமங்கள் தமிழில் பயிலப்பட்டன என்றும், மறை முறையாக அவை பின்னாளில் வடமொழியில், வகுக்கப்பட்டன என்றும்