xxvii
கா. அப்பாத்துரை
நேரிசை வெண்பா
எப்பாத் துறைக்கும் இவனோர் பழம்புலவன்
அப்பாத் துரையறிஞன் ஆழ்ந்தகன்ற - முப்பால்போல்
நூலறிவு! நூறு புலவர்கள் சேரினிவன்
காலறிவு காணார் கனிந்து.
1
ஆங்கிலத்தை அண்டை மொழிகளினைப், பண்டைநாள்
பாங்குற வாழ்ந்த பலமொழியை - ஈங்கிவனே
செந்தமிழ்க்குச் சேர்க்கும் குருதியெனச் சேர்க்கின்றான்
சிந்தனையில் யாவும் செரித்து.
2
விருந்தெனும் நூலை வெளிநாட் டமிழ்தை
அருந்தெனத் தந்தான் அருந்திச் - செருக்குற்றேன்
எத்தனை எத்தனை எண்ணித் தொகுத்தீந்தான்
அத்தனையும் முத்தமிழர்க்குச் சொத்து!
3
சின்னஞ் சிறுவர்முதல் சிந்தனையில் தோய்ந்தாயும்
பென்னம் பெரியர்வர்க்கும் பித்தாக்கும் - வண்ணம்
அருநூல்கள் ஈவான் கலைக்களஞ்சி யம்போல்
வருநூலைப் பாத்துவப்பேன் நான்!
4
ஆங்கிலத்தில் என்பாட்டை ஆரும் வியக்குவணம்
பாங்குறச் செய்தான் படித்தவர் பாராட்டி
வைய இலக்கியத்தில் வாழும்என் பேரென்றார்
ஐயமில்லை அப்பாத் துரை!
5
குறள்வெண்பா
அப்பாத் துரைகொண்டே ஆயிரம்நூல் செய்க
தப்பா துயரும் தமிழ்!
-பாரதிதாசன்,
பாவேந்தம்-18 - பக். 200
தமிழ்மண்