இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இம்மறுப்பு என்று எழுந்தது? - ஏன் எழுந்தது?
இதன் வரலாற்றில் மூன்று படிகள் உள்ளன. அவற்றை அதன் இன்றைய நிலையிலிருந்து பின்னோக்கிச் சென்று பார்ப்போம்.
முதற்காலம், இலக்கணக்கொத்து ஆசிரியரான சுவாமிநாத தேசிகர்க்குப் பிற்பட்ட காலம். அவ்வாசிரியர் தம் இலக்கணத்தில் தமிழிலக்கணமே வடமொழி இலக்கணத்தின் வழித்தோன்றல் என்று காட்டி, மக்களை ஏமாற்ற எத்தனையோ குட்டிக்கரணங்கள் போடுகின்றார். தமது வடமொழிப் பற்றினால், மொழி நூலறிவின்றி, வடமொழி தென்மொழிகளுக்குப் பொதுவான ஒலிகளை எப்படியோ வடமொழி எழுத்துகளென ஒதுக்கி விட்டுத் தமிழ் ஐந்தெழுத்தாலான ஒரு மொழி என்று கொண்டு, "அன்றியும் ஐந்தெழுத்தால் ஒருபாடையென்று-அறையவே நாணுவர் அறிவுடையோரே” என்று மயங்கிக் கூறினார். அறிஞர் சி.வை.தாமோதரம்பிள்ளை இதனைத் தம் கலித்தொகைப் பதிப்பு முன்னுரையில் கண்டித்துள்ளார். இக்காலத்தில்தான், ஆரியர்க்கு, “வக்காலத்து” வாங்கிய பலர், வட சொற்களைச் சிதையாமலும், ஏராளமாகவும் இறக்குமதி செய்தனர். அதற்காகவேண்டியே வட மொழியிலிருந்து தமிழர் உச்சரிக்கவே திணறும் ஜ,ஷ,ஸ,ஹ,க்ஷ என்ற எழுத்துகளையும் வழக்கில் கொண்டுவந்தனர். இவற்றோடமையாது வடசொல் என்று தாம் தம்முடைய மயக்கப் பார்வையில் கண்ட இடத்திலெல்லாம், தந்நகரமிட்டு 'மஹாந்' என்றும், வடமொழி இலக்கணத்தை வலியுறுத்தி 'ஸ்வாமிந்' என்றும் எழுதலாயினர். இன்று யார்க்கும் தமிழ்நாட்டில் தெரியாத-கிட்டத்தட்ட முக்கால் பங்குப் பேர்களுக்கு உச்சரிக்கவே முடியாத 'ஸ்ரீ' என்ற எழுத்தையும் க்காலத்துப் பலர் புகுத்த முயன்றனர். இவ்வளவும் முடியாமல், கடைசியிற் குறிப்பிட்ட எழுத்தின் திரிபாகிய சிரீ என்ற சொல்லை, அரசியலார் உதவிபெற்றுப் புகுத்திச்செய்யும் ஆரவாரத்தைத் தமிழன் என்றேனும் மறக்கமுடியுமா? இவ்வளவு தூரம் தமிழரைப் புண்படுத்தும் சமூகத்தினிடையே கூடப் பாலைவன ஊற்றுப்போலத் தோன்றினார், தமிழறிஞரான பரிதிமாற் கலைஞனார். தமிழியக்கத்துக்கும் தனித்தமிழ் இயக்கத்துக்கும் அன்னார் செய்த பணி தமிழரால் என்றென்றும் மறக்கத் தக்கதன்று. ‘தமிழ்க்கு முகமில்லை' என்று கூறிய வடமொழி