தமிழ் முழக்கம்
251
வாணர்க்கு, ‘வடமொழி வாயற்றுப் போயிற்று'என அவர் விடையிறுத்த செய்தி, தமிழர் புண்களுக்குப் பேராறுதலளிக்க வல்லது.
அக்காலத்துக்கு முற்பட்டது சிந்தாமணிக்கால முதல் லக்கணக் கொத்து வரையுள்ள ஆயிரம் ஆண்டுகள். அக்காலத்தில் எழுதப்பட்ட புராணங்களும் காவியங்களும் தமிழர் பலரால் தமிழ்ப்பண்பு விரவப் பாடப்படினும், பெரும்பாலும் வடமொழியையும் வடமொழி இலக்கியங் களையும் பாராட்டி உயர்த்தி, அவற்றைப் பின்பற்றும் நோக்கமுடையவையாய் உள்ளன. தமிழர் பழைய இலக்கியப் பண்புகளுக்கு இவை கருவூலமாய் விளங்கினும், தமிழரைப் புண்படுத்தும் பல பகுதிகளையும் உட்புதைவாய் மறையக் கொண்டுள்ளன. அவற்றின் முள்ளை நீக்கிச் சுளையை மட்டுமே தமிழர் கொள்ளற்பாலர்.
இனித் தொடக்கக் காலம் வடமொழியை எதிர்த்து நின்ற காலம். இது தொல்காப்பியத்துக்குப் பிற்பட்டுத் திருக்குறட் காலம் வரை. இக்காலத்திலுஞ் சில வடசொற்கள் விரவினும், அவை அருகலாகவும், அடிமை மனப்பான்மை யின்றியும் வழங்கப்பட்டுள்ளன.
இங்ஙனம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழின்மீது வடமொழித் தாக்கை மிகுதிப்படுத்த முயன்றவர் யார்? ஏன் முயன்றனர்?
உலகில் வேறு எந்த நாட்டினரையும்விடத் தமிழ்நாட்டில் பிறப்பு வேற்றுமை மிகுதி என, வரலாறு கற்போரறிவர். தமிழ்நாட்டின் நிலையை நுணுகிக் கற்போர் இவ் வேறுபாடு இயற்கையில் பழக்கவழக்க வேறுபாடு, பொருள் நிலை வேறுபாடு முதலியவற்றை ஒட்டியதே என்றும், இவ் வேற்றுமைகள் நாகரிக முற்போக்கின் இயற்கையான பலன்களே என்றும் காண்பர். அஃது அவர் உலகியலிலே முதல்நிலை பெற்றதன் பயன். ஆரியர் தாங்களே அவர்களைக் குறிக்கும் இடங்களிலெல்லாம், அவர்கள் பேராற்றலுடையவர், பெரிய நகரங்களும் செல்வமுமுடையவர் என்றும் தாம் அவரை வென்றது தந்திரத்தால் மட்டுமே என்றும், கூறுவது காண்க. இவ் இயற்கை வேற்றுமையைப் பிறப்பு வேற்றுமையாகக் கருதுவது