252) ||
அப்பாத்துரையம் - 1
இயற்கைக்கு முற்றிலும் மாறுபட்டது. இயற்கையில் ஏற்பட்ட இம் மாறுதல்கள் இயற்கையிலேயே அழியும் இயல்பு உடையன. அங்ஙனம் அழியாமல் இவற்றை நிலையான நிலவரமாக்குவது, அவற்றைச் சமயத்துடன் தொடர்புபடுத்துவதனாலேயாகும். நாட்டுப்புறத்தில் இன்று அவர்கள் - தமிழ் மக்கள்-வேறு வேறு பழக்கவழக்க முடையாராயினும் ஒருங்கே பொருந்தி வாழ்வதைக் காணலாம். ஆனால், அவர்களிடையே தமிழ்நாட்டு இயற்கை வகுப்பல்லாத வகுப்பினர் உழைத்துண்ணலை விரும்பாது உழைப்பவன் உழைப்பின் பயனை எவ்வகையிலாவது எளிதிற் பெறச் சூழ்ச்சி செய்யும் வகுப்பினர்-அவ்வேற்றுமைகளை என்றும் மாறா நிலவரமான பிரிவினை களாகும்படி, வருணாசிரம நீதியும், ஒரு குலத்துக்கு ஒரு நீதியும் வளர்த்ததுடன், அவ்வகுப்பினர் ஒருவரை ஒருவர் என்றும் வெறுத்துப் பூசலிடும்படி, வகுப்புப் புராணங்களும், உயர்வு தாழ்வு வழக்குகளும் உண்டுபண்ணி அதனைத் தம் போலிச் சமய நூலினுள் புகுத்தினர். 'கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்,' பையப் பையத் தின்றால் பனையையும் தின்னலாம்', என்னும் மூதுரைகளின்படி தமிழர் நாளடையில் அவர்களின் மாயைக்கு ஆளாகித் தம்மவர், பகைவர், தம் சமயம், பகைச்சமயம் ஆகியவற்றின் வேறுபாடறியாது மயங்கினதோடு, இவ்வேற்றுமைகளனைத்தும் தம் சமயத்தின் ஒருபகுதியே என எண்ணி மேற்கொண்டும் விட்டனர். அதுமட்டுமா? அவர்கள், தம்மையே தம் சமயம் தணிப்பதாகவும் கருதிவிட்டனர். அதாவது, ‘தாசி மக்கள்' என்ற பொருளுடைய ‘சூத்திரர்' என்னும் சொல்லைப் பாமரரான தமிழ் மக்கள், விரும்பியோ விரும்பாமலோ, தெரிந்தோ, தெரியாமலோ மேற்கொள்ளும்படி அவர்களை மயக்கிவிட்டனர். வ்வகையில் படித்த மக்களும் செல்வரும் அவர்களுடன் சேரும்படி, அவர்களுக்குச் சற்று உயர்வும், சலுகையும் தரப்பட்டன. என்னே, சமயத்தின் உயர்வும் இன்று அது தமிழ்ப் பகைவர் கைப்பட்டுச் செய்யும் அநீதியும்!
பிறப்பு வேற்றுமையற்ற சமயங்களான சைவ வைணவ சமயங்களைச் சார்ந்தவர் தமிழ் மக்கள். ஆனால், இச் சமயங்கள் வகுப்பு வேற்றுமையை மேற்கொள்ளக் காரணமாயிருந்தது, இவற்றுக்குப் புறம்பான உலோகாயதம் செறிந்த மாயாவாத சமயமேயாகும். இதனைச் சற்றே மாறுபட்ட உருவில்