இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சைவத்தின்மீதும், வைணவத்தின்மீதும் செலுத்தி, வடகலை வைணவம், சுமார்த்தம் என்ற புதுப்பிறவிகளைத் தோற்று வித்தனர் அப்போலிகள்.ஆட்டுத்தோல் போர்த்துத் தம்முடனேயே விரவிய இவ்விரு புலிகளையும், தமதென மயங்கிச் சைவ ரு வைணவராகிய தமிழர் - சிறப்பாகச் சைவராகிய தமிழர் அப்போலிகள் கையில், தம் சமயத்தின் தலைமையிடமாம் கோவிலில் புகும் உரிமையும், தம் சமயத்தலைவரான அந்தணருடனொத்த சிறப்பினையும் தந்தனர். 'மூக்கிற் கிடம்பெற்ற ஒட்டகம்' போல, அப்புறச்சமய, புற நாட்டுப் பார்ப்பார், புகலிடம் பெற்ற இடத்தைத் தமக்குரிய இடமாக்கி, பின் தமக்கே உரியதெனக் கொண்டு, தமிழர் நாட்டிலேயே தமிழரை அவமதித்தும், தமிழர் சமயத்திலேயே தமிழர் நிலையை இழிவுபடுத்தியும், (சூத்திரர் அல்லது தாசி மக்கள் என அவரைத் தாம் கூறியும், அறிவிழந்த அவரையே கூறிக்கொள்ளச் செய்தும்;) தமிழ் என்ற பெயராலேயே தமிழர் நாக்கை அறுக்கும் - தமிழர் செவிக்குக் கைக்கும் - தமிழர் மொழிக்கு அவமதிப்பை வளர்க்க முயலும் போலித் தமிழை உண்டுபண்ணித் தமிழை அழித்தும், அழிக்கமுடியாவிடங்களில் புறக்கணித்தொதுக்கியும் வந்துள்ளனர். இந்நிலையைத் தமிழர் சைவ வைணவத்தில் உண்மைப் பற்றுடையவரென்று கூறும் தமிழர் எத்தனை நாள் பொறுத்திருக்கப் போகின்றனர்? பொறுக்கும் ஒவ்வொரு கணமும் தமிழ்க்குத் தீங்காகும் என்பதனை அவர்கள் உணர்தல் வேண்டும்.
-
-
"படமுடியாதினித் துயரம் பட்டதெல்லாம் போதும்" என்று தமிழ்த்தாய், தமிழ்த்தெய்வம், தன்மக்களைத் தன் தொண்டர்களைக் கூவித் தன் விலங்கை உடைத்துத் தன் மதிப்பாம் வேற்படையெடுத்து, அறிவுலகம், அன்புலகம், செயலுலகம் ஆகிய மூவுலகமும் வென்றடக்க எழும்படி அழைக்கின்றாள். நாம் அது கேட்டும் அவ்வன்னை - அத்தெய்வ அன்னையின் கூக்குரல் கேட்டும் வாளா இருப்பதா? அப்படி இருப்பது நம் பிறப்பு, நம் கடமை, நம் உரிமை அனைத்துக்கும் மாறாயிற்றே! ஆதலின், எழுமின்! விழிமின்! அறிவாகிய வாளும், அன்பாகிய கேடயமும் ஏந்தி, வீரமாம் குதிரை யேறி, முன்னேற்றக் களத்தில் விரைவோமாக! வாழ்க தமிழ்! வாழ்க தமிழ் அன்னை! வாழ்க தமிழ்த் தெய்வம்!!!