பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் முழக்கம்

255

அவர்களிடம் இல்லை. அவர்கள் வாழ்வு பொய்யான போலி வாழ்வேயாகும்! உள்ளே எமனோலையைச் சுருட்டி வைத்துக் கொண்டு காத்திருக்கும், அரசப்பிளவை போன்றதே அவர்கள் வாழ்வு. அதன் வெளிப் பகட்டினுள்ளே தொழிலில்லாமை, வறுமை, செல்வத்திமிர், நிறத்திமிர், வகுப்புப் பூசல், வெறுப்பு, அடிமைத்தனம், அடக்குமுறைகள் ஆகிய பல புழுக்கள் நெளிகின்றன. இத்தகைய வாழ்வில் கலைச் செல்வம் எங்ஙனம் ஏற்படும்?

ஆங்கில நாட்டில் கலைகள் மிகுந்த காலம் என்பது, எலிசபெத் அரசியின் காலம். ஆங்கில மக்கள் வெற்றி யார்வம் மிகுந்திருந்த காலம் அது. வெற்றித் திமிர் கொண்டிருந்த காலம் அன்று! வடநாட்டிலும் விக்கிரமாதித்தன் காலம் அத்தகையது. தென்னாட்டுக்கோ பிற்றை நாளில் சோழப் பேரரசர்கள் காலமும், அதற்கு முன் பாண்டியர் அரசாட்சிக் காலமும், அத்தகைய நல்வாழ்வுக் காலங்களாயிருந்தன.

நம் வாழ்வின் பயனாகக் கொள்ளத்தகும் இக்கலைகள் மாந்தர்க்குப் புலன்வழி இன்பந் தந்து, உள்ளத்தைப் பண்படுத்து கின்றன. புலன்களுள் மெய்யை விட வாயும், வாயைவிட மூக்கும், மூக்கைவிடக் கண்ணும் செவியும் உயர்வுடையன. கண்ணுக்குக் களிதரும் கலைகள் ஓவியம், செதுக்கு, சிற்பம் முதலியன. ஆனால், அவற்றின் படைப்புகள் செயலற்றன.அவற்றிலும் மன உணர்வுக்கு அண்மையுடையது, செவிப்புலனுக்கு உணவு தந்து செயலுடைய தாய் மனோபாவங்களை (உளப் பண்புகளை) இயக்கும் இயல், இசையாகும்.

கட்புலனுக்கும் செவிப்புலனுக்கும் ஒருங்கே விருந்தளிக்கும் கலை, நாடகம் என்பர். இஃது ஓவியத்திலும் உயரிய நடையோவியம்! இசையில் கட்புலப்பட்ட இசை!

இத்தகைய நாடகம் இலக்கியத்தின் துறைகளுள் ஒன்று என்றால், இலக்கியத்தின் பெருமையைச் சொல்ல வேண்டிய தில்லை. நாடக ஆசிரியன், இசையையும், இயற்கையையும் மனித எண்ணங்களையும் குழைத்து, நாடகமாம் மாளிகை கட்டுகிறான். இலக்கிய ஆசிரியனோ, அத்தகைய மாளிகை கட்டுவதுடன் அமையாது, அதனைச் சுற்றிலும் எல்லாவகைச் செயலுருவும், விரிவுரை, தற்கூற்று, குறிப்பு ஆகிய பலவுங் கொண்ட