பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் முழக்கம்

257

வன்மை ஈற்றில் வாராமை ஆகிய செம்மைப்பாடுகள் காணப்படுகின்றன! அரிச்சுவடியில் எழுத்துகளின் ஒழுங்கைப் பாருங்கள். உயிரின் பின் மெய்; இடையில் அரை உயிரான ஆய்தம்! முழுமெய்களான வலியின்பின் குறை மெய்களான மெலியும் இடையும்! இன்னும் சொற்களிலும் இதே மெலியும் வலியும், இதே ஒழுங்கும் பொருள்நயமும் காணப்படும். இதனை ஈண்டு விரித்து ஆராய முடியாதாயினும் ஓரளவிற் கூறுவோம்.

பெண்களைக் கொடி என்று உவமித்தல் கவிஞர் வழக்கு. கொடிகள் ஒரு கொம்பு அல்லது கொம்பின் மீது படரும். பெண்கள் அதுபோல் காதற் கணவனைச் சேர்ந்து வாழ்வராம். ஆகவே, தமிழில் கொடி படரும் கொம்பு கொழு கொம்பாயிற்று; கணவன் கொழுநன் ஆயினன். சரி, கொடி பிறர் கண் கவர்வது மலர் நிறையும்போது; பெண்கள் ஆடவர் கண் கவர்வது பருவமெய்தும்போது, எனவே பருவமெய்துவது பூப்பு எனப்பட்டது. பெண்கள் கணவனுடன் சேரும் வாழ்வு இதற்கேற்ப மணம் எனப்பட்டது. மணவாழ்வின் பயன் குழந்தை பெறுவது. இதனைப் பழம் என்றும் அவர்கள் கருதினர்,ஆனால், பழம் எனச் சொல்லவில்லையே என்று எண்ணலாம். குழந்தை பத்துமாத விளைவு குன்றிப் பிறந்துவிட்டபோது, இவ்வுருவகம் மீண்டும் தலைகாட்டுகின்றது; குழந்தை காய் விழுந்துவிட்டது என்கின்றனர்.

இச்சொற்களுள் எத்தனை உருவகங்கள்! எத்தனை

கற்பனைகள்!

கடவுளின் பெயர்களாகிய கந்தம், கடவுள், சிவம் முதலியவற்றின் நயங்களை மேலே கூறியிருக்கிறோம்.

வெளிப்பார்வைக்குத் தனித்தனி இடுகுறிச் சொற்களாய் இருப்பவை கூட, ஆராய்வார்க்கு, அரிய நயம் புதைந்த உறவுடைய காரணச்சொற்களே என விளங்கும். நிறைவு என்ற பொருளுடைய வண்மை என்ற சொல்லிலிருந்து வெற்றி என்ற பொருள் தரும் வலமும், அதனைக் காட்டும் கொடியைக் குறிக்கும் வலனும் அவ்வெற்றியைத் தரும் கையாகிய வலக்கையும், அவ்வெற்றியை விழைவோர் வலப்புறமாகச் சுற்றும் சுற்றாகிய வலயமும் எழுந்தது காண்க. நூல் என்ற சொல் ஏட்டுக்கும், இழைக்கும் பெயர். நூல் கற்போன் நூல் காப்பணி கின்றான். 'இழை நூல்