(258) ||-
அப்பாத்துரையம் - 1
மரத்தின் கோட்டம் நீக்கும், ஏட்டுநூல் மளக்கோட்டம் தீர்க்கும்' என்றார் நன்னூலாசிரியர். கோணு, கோடு என்பதிலிருந்து வளைவு, மதிலால் வளைந்திருக்கும் கோட்டையாயிற்று. இன்னும் இவை போன்ற பல்லாயிரக்கணக்கான தொடர்களை நோக்கின், நாப் பழக்கத்தால் வரும் தமிழே ஒரு கலை என்றும், மனப்பழக்கத்தால் ஏற்படும் அதன் சொற்களே, இலக்கியக் கற்பனைகளைப் பிழிந்து மணியாக்கிய மணிக்கண்டுகள் என்றும்
காணலாம்.
என்ற
இத்தன்மையினை இலக்கியம், இலக்கணம் சொற்களிலுங் காணலாம். இலக்கியம் என்பது இலக்கு ஆகியது ஆம். ஒரு மனிதன்-ஒரு பெரியார்-தம் வாழ்நாளிற் கண்ட உண்மையினை-உண்மைகளை-அழகினை-நயத்தினைப் பிறர்க்கு இலக்காம் வண்ணம் எழுதிவைத்தால் அஃது இலக்கியமாம்.
அவ்விலக்கியத்தின் பண்பை, அதன் வண்ணத்தை, அதன் உருவினையும் பாகுபாட்டினையும் அமைப்பையும் விளக்குவது இலக்கணமாம்.
இலக்கிய இலக்கணங்களுக்கு இத்தனை அழகிய சொற்கள் வேறு எம்மொழியிலுமில்லை. சிலர் இச் சொற்களே வடமொழியினின்று வந்தன என்று சொல்கிறார்களே? என்று வினவலாம். அஃது இச்சொற்களுக்கு மட்டுமன்று. வேறு பல நல்ல தமிழ்ச் சொற்களையுந்தான் வடமொழி என்று சொல்கின்றனர்! இவற்றுட் பல தமிழினின்று வடமொழி போந்தவை. மறைமலையடிகள் போன்ற பேரறிஞர், இவற்றுட் பலவற்றை எடுத்துக் காட்டியுள்ளனர். இன்னும் பிற அறிஞர் எடுத்துக் காட்டவுஞ் செய்வர். எப்படியும் இலக்கியம், இலக்கணம் என்ற சொற்கள் தமிழே எனக் காட்டுவோம்.
வடசொல் என்று இவற்றைக் கூறும் மக்கள் இலக்ஷ்யம், இலக்ஷணம் என்ற வடமொழிச் சொற்கள் மருவி வந்தவை என்பர். அப்படியே வைத்துக்கொள்வோம். தமிழ் மொழியில் இலக்கியம் என்பது மொழியின் சிறந்த நூல்களின் தொகுதி என்ற பொருளிலும், இலக்கணம் என்பது மொழியின் அமைப்பு நூல், அமைப்புக் கூறும் நூல் என்றும் பொருள்பட வழங்குகின்றன. இப்பொருளில் இச்சொற்களுக்கு மூலங்களாகக் கூறப்படும் இலக்ஷ்யம், இலக்ஷணம் என்ற சொற்கள் எங்கேனும்