தமிழ் முழக்கம்
259
ல்லை. வடமொழியில்
வடமொழியில் வழங்குகின்றனவா? இலக்கியம் இலக்கணம் என்ற ணைச்சொற்களுக்கு ஒன்றுடனொன்று பொருத்தமற்றதாகச் சாகித்யம், வியாகரணம் என்ற சொற்களே பயன்படுத்தப்படுகின்றன.இரண்டிலும் தமிழ்ச் சொற்களின் நயம் தென்படவில்லை. அவை மிக மட்டமானவை. தமிழில் மிகப் பழைமையான காலந்தொட்டே வழங்கிவரும் இலக்கியம், இலக்கணம் என்ற தொடர்புடைய சொற்கள், வடமொழியாளர் என்றும் வழங்காத சொற்களிலிருந்து, வடமொழியாளர் என்றுமறியாத நயமுடைய பொருளில் வந்து வழங்கின என்பது எத்தனை பொருத்தமற்ற புளுகு பாருங்கள்! இவ்வளவு நல்ல சொற்களைக் கையாண்டிருப்பின், அதன்பின் வடமொழியாளர், 'சாகித்யம்’, ‘வியாகரணம்' என்ற மட்டமான சொற்களை வழங்கியிருப்பரா?
அது மட்டுமன்று; தமிழ் இலக்கியம் 'இலக்கு' என்ற சொல்லிலிருந்து வந்தது. இலக்கு என்பதற்கு இடம், குறி, நோக்கம் முதலியதான பலவகை விரிவுடை பொருள்கள் உள்ளன. இலக்கியம் என்ற சொல், அம் மூன்று பொருளும் உடைய இலக்கு என்ற சொல்லிலிருந்து குறிப்பு வினைப் பெயராய் வந்த பிறிதொரு சொல். வடமொழி இலக்ஷியம் என்ற சொல், நோக்கம் என்ற ஒரு பொருள் மட்டுமே கொண்டது. ஆகவே, சொல் வளர்ச்சியோ, திரிபோ, பொருள் நயமோ வடமொழியில் இல்லாமை காண்க. இலக்ஷணம் என்ற சொல்லும், அதுபோல் என்றும் இலக்கணம் என்ற பொருளில் வழங்காதது காண்க.
தமிழ் இலக்கியத்தின் அருமை பெருமைகளைப் பற்றிக் கூறுமுன், தமிழ்க்கும் இன்று நமக்குக் கிடைத்திருக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் உள்ள சரியான தொடர்புபற்றி, ஒரு புதிய செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறேன். 'ஒரு பானைக்கு ஒரு சோறு பதம்' என்றபடி, ன்றைய இலக்கியத்தின் ஒரு பகுதியையோ, இன்றைய இலக்கிய முழுமையையுமோ வைத்துக்கொண்டு, தமிழின் பெருமையையும், தமிழர் இலக்கியப் பெருமையையும் ஆராய்ச்சியாளர் ஆராய்ந்து உய்த்தறியலாம். ஆனால், மேலீடாகப் பார்ப்பவர்க்குத் தற்காலத் தமிழ் இலக்கியத்தை வைத்துக் கொண்டு, தமிழின் முழு இலக்கியத் திறனை அறிய முடியாது என்றுதான் கூறுதல் வேண்டும்.