பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




260

அப்பாத்துரையம் - 1

ஏனெனில், இன்று நமக்குக் கிட்டும் இலக்கியம், உண்மைத் தமிழ் லக்கியம் அல்லது தமிழர் இலக்கியமாகாது. அவ்விலக்கியத்தின் தொன்மை, விரிவு, பண்பு ஆகிய எதைப் பார்த்தாலும், இன்றைய தமிழ் இலக்கியம் தமிழர் இலக்கியத்துக்கு குறைவு பெற்றதேயாகும். எப்படி எனிற் காட்டுதும்:

தமிழில் வரன்முறையாக முத்தமிழ் என்ற வழக்கு இருக்கிறது. இப்பிரிவு வடமொழியில் இல்லை. வேறெம்மொழி யிலும் இல்லை. தமிழிலும் இன்று அஃது இல்லை. ஆனால், மரபு மட்டுந்தானிருக்கிறது.முத்தமிழ்' என்பது இயல் இசை நாடகம் என்பவை என்று, இன்று அறிகிறோம். இசையும், நாடகங்களும் இன்று நம்மிடம் இல்லை. அதைப்பற்றிய சில குறிப்புகளும், சில நூற்பெயர்களும், சிலப்பதிகாரத்தாலும் அதன் உரையாலும் விளங்குகின்றன. அக்குறிப்புரைகளே அவற்றின் தொன்மை, விரிவு, ஆழம் இவற்றை அளந்தறியப் போதுமாயினும், அது வரலாற்றுக்கு மட்டுமேயன்றி, இலக்கிய முறைமையில் போதாதது ஆகும். ஆகவே, இன்று இலக்கியம் என்பதெல்லாம், அதன் மூன்றிலிரண்டு பகுதியைச் சாகடிக்கவிட்டு, மீந்திருக்கும் மூன்றிலொன்றாகிய இயலை மட்டுந்தான்.

வடவர் வேதங்களை ஆராய்ந்தெழுதிய மாக்ஸ்முல்லர், "தமிழரின் நூற்றுக்கணக்கான நகரங்களையும் கோட்டை களையும், ஆரியர்கள் தீயிட்டெரித் தனர். தீ ஆறு மாதம் எரிந்தது. அநேக தமிழ் மறை, இலக்கண இலக்கியங்கள் அதனால் அழிந்தன” என்றெழுதியுள்ளார்.

அவ் வியல்தான் முற்றிலும் உண்டா? தமிழற்கு இன்று கிட்டிய முதல்நூல் தொல்காப்பியம். முதல்நூல் இலக்கணமா யிருக்க முடியுமா? தெலுங்கில் அப்படி முதலிலேயே இலக்கணம் ஏற்பட்டதுண்டு. ஆனால், தெலுங்கிலக்கணம் எழுதியவர் மொழிக்குத்தான் இலக்கணம் எழுதினார். இலக்கியத்தைக் குறிக்கும்போது, வடமொழி இலக்கியத்தைத்தான் எண்ணினார். மலையாளத்தில் அண்மையில் கேரள பாணினியம் என்ற அகன்ற இலக்கணம் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்கு இலக்கியம் மலையாள இலக்கியம் மட்டுமன்று, உலகின் இலக்கியம் முழுமையுமே யாகும். ஆனால், தொல்காப்பியரோ தெளிவாக இலக்கியத்துக்கு தமிழ் இலக்கியத்துக்கு இலக்கணம்

-