தமிழ் முழக்கம்
261
எழுதினார். இலக்கியத்துக்கே உரிய உரிச்சொற்களை எடுத்தாண்டிருக்கின்றார். நூல்நெறி வழக்கு, ஆன்றோர் வழக்கு எடுத்துக் காட்டுகிறார். செய்யுளியல் அணியியல் வேறு, நூல் வழக்குக்கான ஐந்திணை நெறி வேறு. இதையெல்லாம் விடப் புதுமையானது; அவர் முன் இலக்கணங்களைக் குறிப்பிடுவது. உரையாசிரியர் கூற்றுப்படி, இவர் இலக்கணத்தில் முன்னாசிரியர் விட்ட பகுதி, தனக்குக் கருத்து வேற்றுமையுள்ள பகுதி ஆகியவற்றை மட்டுமே விரிக்கிறார் என்று தோன்றுகிறது. அத்தனை இலக்கண இலக்கியமும், முன் இருந்திருத்தல் வேண்டுமே? எங்கே போயின? போயொழிந்த இசை நூல்கள், நாடக நூல்கள், அவற்றின் இலக்கணங்களின் கதி யாது?
தால்காப்பியத்துக்குப் பிந்தி, கடைச் சங்க காலத்துக்குப் பிந்தியுள்ள நூல்கள்கூட எல்லாம் உள்ளனவா? இல்லை! இல்லை! இல்லவே இல்லை! சமண நூலாகிய யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை உரைகளில் மேற்கோள் காட்டிய நூல்கள், புத்த நூலாகிய நேமிநாதத்தில் மேற்கோள் காட்டிய சூத்திரங்கள், பாக்கள் பல இன்ன நூல்களிலிருந்து என்று தெரியவில்லை. ஒளவை எழுதிய அசதிக்கோவை என்ற பாட்டுகள் ஒரு சிலதான் உள்ளன. பரிபாடல், முத்தொள்ளாயிரம் சிறுபகுதியே உள்ளன. பிற்காலப் புலவர் பாடல்கள்கூட எத்தனையோ அழிந்துவிட்டன.
ய
சுருங்கச் சொல்லின், தமிழின் இன்றைய முதல் நூலாகிய தொல்காப்பியத்துக்குமுன், இலக்கிய இலக்கண இசை நாடக நூல்கள் பலவும், பின்நூல்கள் பலவும் மறைந்தன. ஆகவே, இன்றைய தமிழிலக்கியம் விரிவிலும் வளத்திலும், தொன்மை யிலும், தமிழ் முழு இலக்கியத்திலும் எவ்வளவோ குறைவுபட்டது.
தொன்மை விரிவு முதலியவை எப்படியாவது போகட்டும்! தன்மை யிலாவது முற்றிலும் தமிழர் இலக்கியமா? என்று பார்ப்போம்.
தமிழர் வகுப்பு வேற்றுமை பாராட்டுவதில்லை என்று கூறினோம். இன்றைய தமிழ் நூல்களில் தொன்மைச் சிறப்பு வாய்ந்த குறளும், நாலடியும் இதனை நன்கு வலியுறுத்துகின்றன. “பிறப்பொக்கும் எல்லாஉயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்”
என்கின்றார் திருவள்ளுவப் பெருந்தகையார்.