262) ||-
அப்பாத்துரையம் - 1
"தோணி இயக்குவன் தொல்லை வருணத்துக்
காணிற் கடைப்பட்டான் என்றிகழார்”
என்கின்றார் நாலடியாசிரியர். ஆனால், முன்னது வேற்றுமை யில்லை என்று மட்டும் கூறப் பின் செய்யுள் பிறப்பு வேற்றுமையை எதிர்க்கின்றது காண்க. பின்னூலின் காலத்துக்குள், அவ்வேற்றுமை வழக்காற்றில் மிகுந்துவிட்டதே ஆசிரியர் கண்டித்ததற்குக் காரணம். பிற்காலத் தமிழ்ப்புலவர் ஒருவர், “நாற்பாற் குலத்தில் மேற்பால் ஒருவன், கற்றிலனாயின் கீழிருப்பவனே' என்கின்றார். இவ்வாசிரியரும், தமிழர் கொள்கைப்படி வேற்றுமையை எதிர்ப்பினும், பிறப்பாலுள்ள வேற்றுமையை அறிந்துரைக்கின்றது காண்க. இதற்குள் நாற்பாற் குலத்தை நிறுவும் முயற்சி முற்றும் அழிந்துவிட்டது போலும், நல்ல காலமாக இந்நூல் சமய நூலாயில்லை. சமய நூலானால் பிற்கால நூல்கள் அவை சைவமாயினும், வைணவமாயினும், யாதாயினும், படிப்படியாய் பிறப்பு வேற்றுமையை மேற் கொள்வது காணலாம். கற்றவரிடை நேர்மையுடையவர் அதனை வெறுத்து விடுவரே யென்று அஞ்சி, உயர்நிலை அல்லது வைதிக நிலையில் வேற்றுமை யில்லை. கீழ்நிலை அல்லது உலகியல் நிலைக்குமட்டுமே வேற்றுமை உண்டு என்றுஞ் சொல்லத் தொடங்கினர். கல்வியைத் தன் உயர்வுக்குப் பயன்படுத்திய வகுப்பினரின் தலைவரான சங்கராச்சாரியார், இன்றும் சைவ வைணவ சமயத்தில் சாதிப்பிடிப்பு படிப்படியாய் ஏறிவருவதும், அச்சாதியை ஏற்கத் தயங்கும் கோழைகளைச் சாதிப்பித்தர் தென்கலை வைணவர் என்றும், சைவர் சற்சூத்திரர் என்றும் இழித்துக் கூறுதலும் காண்க. ஆனால், முன்னாளில்,“உலகியலில் வேற்றுமையுண்டு, வைதிக நிலையில் வேற்றுமையில்லை" என்பது போய், "இன்று வேற்றுமை பாராட்டுவார்தாம் வைதிகர், பாராட்டாதவர் உலகியல் நிலையினர்” என்று மாறிவிட்டது. இம்மாறுதலும் காலத்தின் கோலம் போலும் ! அண்மைக் காலங்களில் தமிழிலக்கிய இலக்கணங்களில் பிறப்பு வேற்றுமை புகுத்தப்பட்ட அளவுக்கு எல்லையேயில்லை! நல்ல காலமாக அவற்றை ஏற்குமளவு அறிவு நமக்கில்லை. மக்களில் வேற்றுமையில்லை என்று நாம் சொல்ல பிற்காலத் தமிழ் நூல்கள் பார்ப்பனரையும் ஒருபடி தாண்டி பாட்டிலும் நான்கு சாதி,