(264
அப்பாத்துரையம் - 1
கடல் கொண்டதனால் இறந்துபட்டதென ஆராய்ச்சி யாளர் கூறுகின்றனர். பழந்தமிழ் நூல்களும் உரைகளும்கூட இதற்குச் சான்று கூறுகின்றன. அங்ஙனம் கடலுஞ் சிலவற்றைக் கொண்டதென்பதற்குத் தடையில்லை.
ஆனால், கடல் கோளையும், தமிழ் வேதங்களையும் எதிர்க்கும் ஓர் ஆசிரியர் கூறுகின்றபடி, கடல்கோள் தமிழர் நூல்களுக்கு மட்டுமா? தமிழர்களிடையும் நூல்கள் மட்டுமா அப்படிப்போகும்? போயினும், கடல்கோளுட்படாத அன்றைய தமிழ்நாட்டுப் பகுதியிலுள்ள படிகள் எங்குப் போயின? படிகள்தாம் போயினும் வடமொழி மறைகள், கீதை முதலியவை மக்கள் மனமென்றும் ஏட்டில் வழங்கி இன்றும் உள்ளனவே? தமிழ் நூல்கள் மட்டுமா அங்ஙனம் மக்கள் மனத்தாலுங்கூட இல்லாதொழிதல் வேண்டும்?
இவ்வினாக்கள் உண்மையில் திகைப்பளிப்பவையே.ஆயின், தமிழ் நூல்கள் பிற மொழிகளனைத்தும் தொடங்கு முன்னமேயே அடைந்த விரிவையும், அக்காலத்து எழுத்து வசதிகளையும் நோக்க, நூல்களைப் பாதுகாக்க என்று ஒரு தனிக்கூட்டம் இருந்தாலல்லது, அவை பேணப்படமுடியாது என்று காணலாம். தமிழ்நாட்டில் பாணர் என்ற பாடும் வகுப்பு ஒன்று இருந்தது. ஆனால், உண்மையில் நூலியற்றியவர் எல்லா வகுப்பிலுமிருப் பினும் அதைப் பேணுவதற்கான ஒரு வகுப்பு இருந்திருத்தல் வேண்டும். அதுவே தமிழ் அந்தணர் வகுப்பு. அவர்கள் பிற்றைநாள் பார்ப்பனர் - அவரைச் சார்ந்த பிறநாட்டு அரசர் - வரவால் ஒளி மழுங்கினர். ஒழுக்கமே உயிர் எனக் கொண்ட பழந்தமிழந்தணர், குணத்தின் பயனை- பொறுமையையும் பணிவையும், தன்னல மறுப்பையும் இன்றும் ஓரளவு காணலாம். இவர்கள் எதிர்க்கும் குணமில்லாததால் தலைமை மாறும் காலத்தில் அடிமைச் சுமை பெற்றனர். ஆனால், பார்ப்பனரோ ஆரவாரமும் புறவேடமும் மிக்கவராய், உலகியல் சூழ்ச்சியும், உயர்ந்தோரைக் கவரும் மாய்மாலமும் உடையரா யிருந்ததனால், அவ் அந்தணரையும் பிற தமிழரையும் அடுத்துக் கெடுத்து அவர்களைத் தமக்குக் கீழ்ப்படுத்தினர். அவ் அந்தணர் பூசை செய்த கோயிலினுள், சமையல் வேலையை அரசனை யண்டிப் பசப்பி அடைந்து, ஆணவமற்ற அவ் அந்தணர்களின்
-