(266)
அப்பாத்துரையம் - 1
வெவ்வேறு கிளைகள்கூடத் தமிழிலக்கியத்தில் தனியிடம் பெற்றுள்ளன. முதன்முதலில் தமிழ்நாட்டில் நுழைந்த புறச்சமயங்களாகிய சமண புத்த மாயாவாத சமயங்களோ என்னில், தனித்தனி ஒரு மொழியின் இலக்கியத்துக்குப் போதிய அளவு இலக்கியப் பகுதிகள் உடையவை. அவற்றுள் இறந்துபட்டன பல. இன்று பல இடங்களில் தமிழறிஞர் தமிழிலக்கியத்தினைப் பற்றிப் பேசும்போதெல்லாம். ஒவ்வொருவர்க்கும் தமிழிலக்கியத்தின் ஒரு பகுதியையோ, சிலபகுதிகளையோ மனத்தில் வைக்கின்றார்களேயன்றி வேறன்று. சமயக் கட்சிச் சார்பின்றித் தமிழிலக்கியங்களை ஓரிடத்தில் திரட்டினால், பண்பினால் மட்டுன்றி அளவினால் கூடத் தமிழ் பிறமொழிகளின் லக்கியங்களினும் நிறைவுடையதாயிருக்கும் என்பதில் ஐயமில்லை.
தொன்மையை எடுத்துக்கொண்டால், இன்றைய இந்திய மொழிகளுள் தமிழ் எல்லாவற்றிலும் எத்தனையோ மடங்கு தொன்மை மிக்கது. வடநாட்டுத் தாய்மொழிகளுள் குஜராத்தி முதலிய மொழிகளில் மிகப் பழைமையான இலக்கியம் காந்தியடிகள் எழுதியவை, என்னும்படி அவை அவ்வளவு புத்தம் புதிய வளர்ச்சியையுடையன. உருதுவை நோக்கினால், அம்மொழிதானும் பேரரசர் அக்பரால் புதுவது புனையப் பெற்றதாகும். போக வடமொழிகளுள் பழைமை யுடையவை வங்காளியும், இந்தியும், மராத்தியுமேயாம். வங்காளி நம் கண்களுக்கு முன்னேயே அந்நாட்டினர் ஒப்பற்ற மொழிப்பற்றின் வெளிப்பயனாக வளர்ந்தது. அதன் முதல் இலக்கிய நூலும், இந்தி, மராத்தி முதலியவற்றின் முதல் நூல்களும் அவ்வம் மொழியின் இராமாயணங்களேயாகும். வங்காளி இராமாயணம் சைதன்யரால், இந்தி இராமாயணம் கம்பர்போல் புகழ்பெற்ற துளசிதாசரால், மராத்தியில் ஆழ்வாருள் சூடிக்கொடுத்த நாச்சியாரை ஒப்பக் கண்ணன் காதலிலீடுபட்டு உலகு துறந்த மீராபாயினால் இயற்றப்பெற்றவை. இம்மூன்று வடநாட்டு நூல்களுக்கும் தூண்டுதலாயிருந்தது தென்னாட்டு இராமாநந்தரே. அவை இந்நாட்டுச் சமயமாம் கடலினின்று, ராமாநந்தராகிய புயல், நீர் மொண்டு சென்று வடநாட்டில் பொழிந்த முதல் மழைத்துளிகளேயாம்.