தமிழ் முழக்கம்
[267
தென்னாட்டை எடுத்துக்கொண்டால், துளு, குடகம் முதலிய மொழிகள் இன்றும் இலக்கிய உயிர்ப்படையவில்லை. மலையாள மொழியின் இலக்கிய வரலாறு சென்ற இரு நூற்றாண்டுகளுக்குள்ளேயும், மொழி அதனினும் சற்றுதான் பழைமையுமுடையன. சேரமான் பெருமாள் நாயனாருடன் மலையாள மொழியும் அரசியலும் பிரிந்தன என்பர். அதற்குமுன் மலையாளம் நல்ல செந்தமிழ் நாடாய்ச் சிலப்பதிகாரம் போன்ற முத்தமிழ் நூல்களைத் தோற்றுவிக்கும் உயிர்ப்பண்புடையதாய் இருந்தது. தெலுங்கில் இலக்கியம் ஏற்படத் தொடங்கியது. தெலுங்கு இராமாயணம் எழுதிய திக்கணர் காலம்முதல்தான்; அதாவது 12ஆம் நூற்றாண்டில்தான், அதற்கு முன்னைய நூல் எட்டாம் நூற்றாண்டில் நன்னய பட்டர் எழுதிய இலக்கணம் ஒன்றே. இதுவும் மேற்குறிப்பிட்டபடி அரை வடமொழி இலக்கணமேயாம்.
கன்னடமொழி சமணரால் - சமணரைப் பின்பற்றிய வீர சைவரால் பேணப்பட்ட காரணத்தால், வடமொழி தமிழ்மொழி நீங்கலாக, மற்றெல்லா இந்திய மொழியிலும் தொன்மை யுடையது. பழங்கன்னடமொழி கிட்டத்தட்ட செந்தமிழே என மேலே கூறினோம். அதன் இலக்கியம் எட்டாம் நூற்றாண்டு முதற்கொண்டது.
தமிழ் இவ்வெல்லாமொழியிலும் முந்தியதெனக் கூற வேண்டியதில்லை. வடமொழியைப் பின்பற்றி எழுதிய ய சிந்தாமணிகூட, இவையனைத்துக்கும் முந்தியதாகும் - ஐந்தாம் நூற்றாண்டுக்குரியதாதலின்.
தமிழின் தொன்மையை வடமொழியுடன் ஒப்பிடுமுன், உலகின் பிற மொழிகளுடன் இதனை ஒப்பிடல் வேண்டும்.
ஐரோப்பிய மொழிகள் அனைத்துக்கும் இலக்கியக் காலம் பதினான்காம் நூற்றாண்டுக்குப் பிந்தியதேயாகும். இறந்துபோன கோதிக்கு, ஐஸ்லாண்டிக்கு, சாக்சன் முதலியவற்றில் சில மொழிபெயர்ப்புகளும் சிறு நூல்களும் மட்டும் பத்தாம் நூற்றாண்டு முதற்கொண்டு இருந்தன. இதுபோக ஐரோப்பியரின் பண்டை இலக்கியமெல்லாம், இலத்தீன் கிரேக்க மொழிகளில் மட்டிலுமேயாம். இலத்தீன் இலக்கியம்