பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




268

கி.மு.இரண்டாம்

நூற்றாண்டுக்கும்

அப்பாத்துரையம் 1

கி.பி.இரண்டாம்

நூற்றாண்டுக்கும் இடைப்பட்டது. கிரேக்க இலக்கியமோ இன்னும் பழைமை யுடையதாய் கி.மு. ஏழு, ஆறாம் நூற்றாண்டு முதற்கொண்டது. ஹோமர் என்ற முதற்கவி கி.மு.பத்தாம் நூற்றாண்டிலேயே - எழுத்து ஏற்படு முன்னரே - பாடினர் என்பர்.

ஐரோப்பியரினும் முந்திய நாகரிகங்கள் நடுநிலக்கடல் வட்டாரங்களில், எகிப்து, சிறிய ஆசியா, அசிரியா, பினிஷியா முதலிய இடங்களிலிருந்தன. அவர் சில வகையில் தமிழரை ஒத்த உயர் நாகரிகமுடையவர். கணக்கு முதலியவற்றில் முதன்மை அடைந்தவர். ஆனால், இலக்கிய வளர்ச்சி பெற்றிலர்.

இவையனைத்தையும் விட்டு, வட தென்மொழிகளைக் கவனிப்போம். மேனாட்டு மிகத் தொன்மை வாய்ந்த மொழியாகிய கிரேக்கத்துடன் வடமொழி பலவகைகளில் ஒப்புடையது. வடமொழியின் முதல் நூலாகிய ரிக் வேதத்தின் காலத்தைப் பலரும் பலவாறாகக் கணிக்கின்றனர். மிகப் பிந்திய கணிப்பை எடுத்துக் கொண்டாலும், அது ஹோமரைவிட ஐந்நூறு ஆண்டுகட்கு முற்பட்டதென்பர். ஆனால், இதில் ஒரு குறை உண்டு. இஃது இலக்கிய நடையில் எழுதப்பட்ட நூலன்று. முதன் முதல் இலக்கியநடை அமையப்பெற்ற நூல் வால்மீகியின் இராமாயணமேயாகும். இஃது கி.மு.எழுநூறுக்கும், கி.மு.நூறுக் கும் இடைப்பட்டதாயிருக்கலாமென்று அறிஞர் கூறுகின்றனர். இதன் அடுத்த இலக்கிய நூல் கி.பி.நூறிலேயே ஆதலின் அதனை அண்டியதேயாக இருக்கக் கூடும். தமிழில் இன்றைய முதல் இலக்கிய நூல் திருக்குறளும் சிலப்பதிகாரமும் ஆகும். முன்னது கி.பி.முதல் நூற்றாண்டினது. பின்னது இரண்டாம்

நூற்றாண்டினது. இக்கால வடமொழி, கிரேக்கம், இலத்தீன் ஆகியவற்றின் இலக்கியத்தைத் தவிர மற்றெல்லா இலக்கியத் துக்கும் முற்பட்டதெனக் காண்க.

ஆனால், அதே காலத்தில் தமிழில் இன்னொரு வகை இலக்கியம் இருந்தது. அதுதான் சங்க நூல்கள். இவை வட வை வடமொழி லக்கியத்தினும், அதனைப் பின்பற்றிய பின் நாளைய இலக்கியத்தினும் உயரிய பண்பாடு உடையவை. அதாவது திணைவழு, காலவழு, இடவழு அற்றவையாகும். காலைநேர வர்ணனையில் மாலையிற் பூக்கும் மலர்கள் மலர்ந்ததாகவும்,