பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் முழக்கம்

[269

கார்காலக் கதையினிடையில் வேனிற்காலப் பூக்கள் பூத்ததாகவும், கூறும் பாடல்கள் பிற்காலத்தும் பிறமொழிகளிலும் மலிந்து கிடக்கக் காணலாம். இவற்றில் தவறாத இலக்கியங்கள் தமிழ்ச்சங்க இலக்கியமும், கிரேக்க இலக்கியங்களும் மட்டுமேயாம். இவ்வகையில் கிரேக்கரைவிடத் தமிழர் பலமடங்கு உயர்வுடையவர் என்பதை அவர்கள் உயரிய திணைப் பாகுபாடு, கருப்பொருள், உரிப்பொருள் பாகுபாட்டினால் அறியலாம். இதில் ஒரு கூறு கிரேக்கரிடம் உண்டு. அவர்களது'பாஸ்டோரல்' (Pastoral) லக்கியம் தமிழர்தம் முல்லைப் பாட்டினை நினைவூட்டவல்லது. அவர்களது 'ஓடங்கள்' (Ode) தமிழர் குரவைப் பாட்டுகளை ஒப்பவை. ஆனால், அது போன்ற பல திணையும் தமிழில் சங்க இலக்கியத்தில் உள்ளன. அதனுடன் நேரிடை வருணனை மட்டுமன்றி, அடைமொழி, உவமை, ஆகிய எதனினும் இவ்வமைதி தோன்றப் பாடுபவர் தமிழர். இவ்வகையில் வடமொழியில் வால்மீகியும், காளிதாசனும், ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் முதலிய கவிஞர்களும் பெருவழுக்கள் உடையவர் என்று அறிஞர் கூறுகின்றனர்.

இவ்வளவு உயர் பண்புடைய சங்க நூல்கள், பெரும்பாலும் தொகை நூல்களாகவே இருக்கின்றன. தொகை நூல்கள் பல நூற்பகுதிகளையோ, தனிப் பாடல்களையோ, தொகுத்து இயற்றியவை. பல சிறு காவியத் துண்டங்களா யிருப்பினும், பல காவியப் பதிவுகளாக அவை திகழ்கின்றன. எப்படியும், அக்காலத்தும் அதற்கு முன்னும் காவியங்கள் இருந்தன என்பது சிலப்பதிகாரம் முதலிய அற்றை நாள் நூல்களாலும், இலக்கணக் குறிப்புகளாலும் அறிகிறோம். இக்காலத்துப் பெருந்தேவனார் பாரதம் ஒன்றிருந்ததென்பதும், இராமாயணக் கதை நன்கு தமிழ் நாட்டில் பரவியிருந்ததென்பதும்கூட முன்னைக் காவியங்கள் உண்டென்பதை வலியுறுத்தும்.

புறநானூறு, பரிபாடல் முதலியவற்றின் பாடல்கள் மிகப் பழைமையுடையன. சில, பாரதப் போர்க்கதை முதலிய பண்டைப் புராணச் செய்திகளைத் தம் கால நிகழ்ச்சிகளாகக் கூறுவன. வையனைத்தும் போக வேதக்காலத்துக்கு அண்டியோ, முன்னோ இயற்றப்பட்ட தொல்காப்பியமே விரிந்த இலக்கியத்துக்கு இலக்கணம் வகுப்பதையும், அதனை ஒத்ததான