பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




270

II-

அப்பாத்துரையம் - 1

வடமொழி இலக்கணம் மட்டும் கூறி இலக்கியத்தினிலக்கணம் கூறாததும் நோக்கத் தமிழ் மொழி வேதக்காலத்துக்கும், தால்காப்பியக் காலத்துக்கும் முன் போந்த இலக்கிய வளமுடையதாயிருந்தது தெளிவாக புலப்படும். ஹரப்பா, மொகஞ்சதாரோ முதலிய இடங்களின் புதைபொருளாராய்ச்சி யாலும் பழந்தமிழ் நாகரிகம் நன்கு வெளிப்பட்டிருக்கின்றது. ன்னும் பழம்பொருள் புதைபொருளாராய்ச்சி, மொழி ஆராய்ச்சி இவையும், ஏடுகளின் சோதனைகளும் தமிழிலக்கியத் தின் பண்டை வரலாற்றை இன்னும் தெளிவு படுத்தக்கூடும், எப்படியும், இன்றிருக்கும் இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு நோக்கினாலும்கூடத் தமிழ் இலக்கியம் தொன்மை, விரிவு, பண்பாடு ஆகிய எல்லாவகையிலும் உலகின் உயர்தனிச் செம்மொழிகளுள் முதன் மொழியாய் இலங்கும் என்பது உறுதி. அதுபோல அஃது இன்று வாழும் புது மொழிகளுள்ளும், வளரும் மொழி களுள்ளும்கூட முதலிடம் பெறுதல் வேண்டும். அது வகையில் தமிழர் உழைக்க முன்வருதல் வேண்டும்.

கழிந்த சில ஆண்டுகளாகத் தமிழர் அங்ஙனம் உழைக்க முன்வந்ததன் பயனாகத் தமிழரிடையே புது மலர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.ஆனால்,பிறக்கும் உயிரின் வாழ்நாளுக்கியையக், கருவளர்ச்சி நாளும், கருவுயிர்க்கும் துன்பமும் மிகுதிப்படும் என்றபடி, தமிழின் புதுமலர்ச்சி நீடிப்பும், பலவகைக் குழப்பமும் நிறைந்ததாயிருக்கிறது. அதனிடையே பலர் ஒளி காண முடியாது - புதுப் பிறப்புக் காணமுடியாது - மலைக்கின்றனர். அங்ஙனம் மலைக்காது தமிழ்ப் பணி - தமிழிலக்கியப் பணியில் அவர்களைத் தூண்ட முயலுவோம்.

தமிழிலக்கியமாவது. தமிழர் தொன்று தொட்டுக் கொண்ட உயர் கருத்துகள், உயர் பண்புகள், உயர் கலைகள் இவற்றின் மொழியுருவப் பண்பாடேயாகும். மொழியுருவில் எல்லாப் பிற கலைகளையும் நாம் நமது குருதியுடன் முன்னோரிடமிருந்து பெற்றோமேயல்லாது, பயின்று பெறவோ மேம்படுத்தவோ செய்தல் அருமையானதே. ஆனால், இலக்கியமோ தாய்ப் பால்போல் தாய்மொழியுருவில் நம் உள்ளத்தில் படிந்து, நம்மை நம் முன்னோர்கள் கண்ட செம்பொருட் களஞ்சியத்தின் உருவில் அமைக்கின்றது. நம்