பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் முழக்கம்

மு

[271

ன்னோர் கனாக்களை, நம் கனாக்களை, நம் கனவிலும் நனவிலும் படியவைக்கிறது.

இங்ஙனம், தமிழ் இலக்கியம் நம் வாழ்வில் கலக்க வேண்டுமானால் நாம் இலக்கியம் என்ற பேரால் பிறநாட்டு இலக்கியங்களின் ‘காப்பி’களையோ, பிறநாட்டு இலக்கியத்தின் மாதிரியில் எழுதப்பட்ட 'போலி'களையோ தாராளமாகக்

கொண்டுவிடல்கூடாது. இதனால், மொழிபெயர்ப்புகளையோ, பின்பற்றுதலையோ நாம் கண்டிக்கவில்லை. அவை முதல்தர இலக்கியமாகா என்று மட்டுமே கூறுகின்றோம். தமிழ்நாட்டில் பிற்காலத்தில் எழுதப்பட்ட தலபுராணங்கள் பெரும்பாலும் மொழிபெயர்ப்புகளும் 'காப்பி'களுமேயன்றி வேறல்ல. அவற்றில் இலக்கியச் சுவை, கவிதை, பாட்டு மணம் இருக்கலாம். ஆனால், அவையல்ல தமிழர் விரும்பும் தனிப் பேரிலக்கியங்கள். இடைக்கால நூல்களான சிந்தாமணி, கம்பராமாயணம் முதலியவை கதையளவில் மொழிபெயர்ப்புகள் என்பதில் தடையில்லை. கொள்கை அளவில் அவை தமிழினத்துக் கேற்புடையனவுமல்ல. ஆரியக் 'காப்பி'கூட அல்ல; ஆரியத்தை மீறிய காட்டாரியமேயன்றி வேறன்று. வடமொழியாளர்கூட ஏற்காத அளவு இராமனைக் கடவுளாகவும், வீடணனை வீரனாகவும், வாலியைக் குற்றமுடையவனாகவும் புனைந்ததுடன், படித்துப் படித்துப் பலவகையில் பார்ப்பனச் சமயத்துக்குக் கருவியாக அவை பயன்பட்டிருக்கின்றன. மொழியிலும், நடையிலும் பாட்டியல்பிலுமோவெனில், அவை ஆரிய மொழியின் போக்கை உயர்த்தும் முறையிலேயே நடைபெறுகின்றன. அதில் உள்ள தமிழ்ப் பண்புகள் எல்லாம், அதனை, அவற்றில் கலந்த நஞ்சைத் தமிழர் தொண்டைக்குள் செலுத்த, கூடச் சேர்த்த வெற்றினிப்பேயன்றி அவர்கள் கண்களைக் கவரத்தந்த வெளிப்பூச்சேயன்றி -வேறன்று. இந்நூல்களும் தமிழர் உயர்வை ஓரோரிடங்களில் விளக்குமாயினும், சிறப்பானவை அல்ல.

'பொற்கலத்தைக் காட்டி அதிலுள்ள கள்ளினுக்கு மதிப்புத் தேடுவது போல்' இன்று அவற்றின் கவர்ச்சியான கவிதை காட்டப்பட்டு, இவற்றிலுள்ள கள் - நச்சுக்கள் - தமிழர்க்கு ஊட்டப்பட்டு வருகின்றது. அந்நூற்களின் பேரால் வருணாச்சிரம