கவிராயர்கள் காலத்தில் கவிதைகள் இலக்கண நிறைவும், வழுவிலா அமைப்பும் உடையவையாயிருந்தன. கம்பரிடையும் வில்லிபுத்தூராரிடையும் காணுதற்கரிய திறனையும், அமைப்பு நுணுக்கங்களையும் சில கொண்டிருந்தன. கம்பரிடையும், செயங்கொண்டாரிடையும் காணாத புலமையை அவற்றில் காணலாம். ஆனால், உணர்ச்சியும் ஆர்வமும் தற்சார்பும் புதுமையும் மட்டுமே குறைவு. அவற்றின் பெருமையெல்லாம், அவை முன்னைய கவிதைக் காலத்தின் மகுடம் என்பதேயாகும். தே வகைப்பட்ட கவிதைக் காலத்தின் மகுடமே சங்க காலமாகும்.ஆனால், சங்க காலம் கவிராயர் காலத்திலும் மிகவும் உயர்வுடையது. ஏனெனில், கவிராயர் காலத்துக்கு முந்திய கம்பர் காலம் தமிழ் இலக்கியம் தற்காப்புப் பெற்ற காலமன்று. தமிழர் அறிவிலும், கலையிலும் மேம்பட்டு நின்ற காலமல்ல. அழிந்து, பின் பிறரை நோக்கி எழ முயன்ற காலமேயாகும். ஆகவே, சங்ககாலம் கவிராயர் காலத்தைப் போன்ற காலமாயினும் கவிராயர் காலத்தினும் தமிழ்ப் பண்பு மிகுந்த காலமாகும். கவிராயர் காலத்திலும் கம்பர் காலம் எத்தனை உயர்வுடையதோ, அவ்வளவு உயர்வுடையதாயிருந்திருத்தல் வேண்டும் சங்க காலத்துக்கு முந்திய காலம் - தமிழ் நூல்களின் கூற்றுப்படி இக்காலமே முதல், இடைச் சங்க காலமாகலாம். இக்காலத்தில் மாபுராணம், தகடூர் யாத்திரை முதலிய பெரிய காவியங் களிருந்தன என்று பின்னூல்கள் கூறுகின்றன. தொல் காப்பியத்தில் அத்தகைய நூல்களின் எத்தனையோ வகை இன்றைய தமிழராகிய நாம் இன்னதென்று நன்கு தீர்மானிக்க முடியாத - புதிய வகைகள் கூறப்படுகின்றன.அவற்றுட்சில இன்று தமிழர்க்குப் புதிய வகைகள், எடுத்துக்காட்டாக மகாமகோபாத்தி யாய பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார் ஆராய்ந்த சங்ககாலத்து 'அங்கதங்களை'க் கூறலாம். அல்லது புதுக் கருத்துகளை ஆம்; அக்காலத்துப் புதுக் கருத்துகள் உடையவர் தமிழர் - புதுக்கருத்துகளைப் புதுவதாகப் புனைந்து கூறும் 'விருந்து' என்ற வகையைக் கூறலாம். அல்லது, பெருங் காப்பியமாய்ப் பழங்கதையைப் பாட்டிலும் உரையிலும் கூறும் 'தொன்மை' என்னும் வகையைக் கூறலாம்.
உலகில், பொதுவாக எல்லா இலக்கியத்துக்கும்
எல்லாவகைப் பொருளுக்கும் இளமை, முதிர்ச்சி, நலிவு ஆகிய