மூன்று பருவங்கள் உண்டு. தமிழ் இலக்கியத்தில் வடமொழி விரவிய காலத்துக்கு அத்தகைய மூன்று பருவங்களையும் எளிதாகக் குறிக்கலாம். சிந்தாமணியும், பெருங்கதையும் இடைக்காலத் தமிழிலக்கியத்தின் தோற்றக் காலம். கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்தி, சயங்கொண்டார் ஆகிய புலவர் வாழ்ந்த சோழர் காலம் அதன் முழு வளர்ச்சி, அல்லது முதிர்ச்சி, அல்லது பொற்காலம். கவிராயர் காலம் அதன் நலிவுக்காலம் எனலாம். இம்மூன்றும் சேர்ந்து தமிழிலக்கியத்தில் தமிழிலக்கியத்தின் ஒரு பகுதியான வடமொழி சார்புப் பகுதியில் ஓர் ஆயுட்காலம் ஆகும்.
எல்லா வகையிலும் அத்தகைய மூன்று பருவங்கள்
காணலாம். வடமொழியில் வால்மீகி, பாசன் காலம் தோற்றக் காலம். காளிதாசன் காலம் முழு வளர்ச்சிக் காலம். தண்டி போஜன் முதலியோர் காலம் முதுமைக் காலம். இதன் பின்னும் தென்னாட்டுச் சங்கரரும், அப்பைய தீட்சதரும் அதற்கு ஒரு மறுவாழ்வு தந்தனர். அதன் பின் வடமொழி இலக்கியம் அழிவுற்றது.
ஆங்கிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள் அது ஷேக்ஸ்பியர்
காலத்தில் தோன்றிற்று, மில்டன் காலத்தில் முழு வளர்ச்சி அடைந்தது. பதினெட்டாம் நூற்றாண்டில் முதுமை பெற்றழிந்தது.பத்தொன்பதாம் நூற்றாண்டில் மீண்டும் ஒரு முறை வளர்ந்தோங்கி இன்று நலிந்து வருகின்றது. எனவே, ஆங்கிலத்தில் இரண்டுமுறை வாழ்வு ஏற்பட்டிருத்தல் காண்க. ஆனால், இரண்டு வாழ்வும் மொத்தம் நானூறு ஆண்டுகளுக்குள். வடமொழியில் ஓர் ஆயுள் ஓராயிரம் ஆண்டு. ஆனால், ஓர் ஆயுளே அதற்கிருந்தது. ஆங்கிலத்துக்கு இருமுறை வாழ்வு, ஆனால் இரண்டும் சேர்ந்து நானூறாண்டுகள்தாம். ஆங்கிலம் அதற்குமுன் வேறு மொழி உருவில் இருந்தது. எனவே, அதனை ஆயுள் நீட்டிப்புக்குறைவு என்று கொள்ளுதல் தவறன்று.
ஆங்கிலமும் வடமொழியும் பிறமொழிகள் அனைத்துக்கும்
மாதிரி வகைகள் என்று கூறலாம். தமிழை அவற்றுடன் ஒப்பிடுவோம். சிந்தாமணி முதல் கவிராயர் காலம் வரை ஓர் ஆயுள் எனக் கூறலாம். அதன்பின் பாரதியாருடன் ஒரு புது இளமைக்காலம் தொடங்குகிறது. சிந்தாமணிக்கு முந்திய