பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறந்துள்ள நாடகப் பகுதி தென்னாட்டில் சங்க காலமுதல் ஆதரிப்பாரற்று அழிந்துவிட்டது. உரைநடை வடமொழியிற் போலவே தமிழிலும் குறைவு. இவற்றுள் முதற் குறையைச் சுந்தரம் பிள்ளையின் மனோன்மணியமும், சம்பந்த முதலியாரின் நாடகங்களும் ஓரளவு நீக்க முயலும். இவற்றுள் முன்னது ஒன்றே இலக்கியத்துறை முயற்சி, பின்னதும் பிற முயற்சிகள் பலவும் தொழில் முயற்சிகளாகவே காணப்படுகின்றன.

        உரைநடை வேதநாயகம் பிள்ளை, சூரியநாராயண

சாஸ்திரி, மறைமலை யடிகள், திரு.வி.கலியாணசுந்தர முதலியார் ஆகியவர்களால் மிகவும் முன்னேற்ற மடைந்துள்ளது. புதிய எழுத்தாளர் பலர் கட்டுரைகளும், இலக்கியச் சார்பான புது உரைகளும், புதுக்கதைகளும், எழுதுகின்றனர். அத்துறையை ஒட்டி டாக்டர் மகாமகோபாத்தியாய சுவாமிநாத ஐயர் அழகிய கட்டுரைகள் பல எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

      இன்னும் புத்திலக்கியம் தோற்றுவித்துத் தமிழன்னைக்கு

நூன்மாலை பாமாலை சார்த்துதல் வேண்டும். பழ அணிகளும் புதுக்கிப் போற்றப்படுதல் வேண்டும். இவ்வகையில் நாம் கடுமை என்ற பூச்சாண்டியில் விழுந்து முன்னது போற்றாமலிருக்கப் படாது. பிறமொழிச் சொற்கள் வரவு இயற்கையாய் உயிருள்ள மொழிகளில் ஏற்படினும், தமிழில் அவை வருவதைத் தடுக்க வேண்டுமென்று கூறத் தனிக்காரணங்கள் பல உள. தமிழ் சொல்வளம் மிக்கது; சொற்கள் பெரும்பாலும் காரணச் சொற்கள். முற்கூறியபடி மொழியே உயர் இலக்கியப் பண்பாட்டை உள்ளடக்கியது. மேலும், ஆங்கிலம் முதலிய மொழியினர் பிற சொற்களை ஆள்வோராயிருந்து வேண்டும்போது எடுக்கின்றனர்.

      தமிழ், அரசியல், சமயம், கல்வி ஆகிய எல்லாவற்றிலும்

அடிமைப்பட்டுக் கிடப்பதால், சொற்களை அது எடுப்பதற்கு மாறாக, அவை அதன்மீது சுமத்தப் பட்டிருக்கின்றன. ஆதலின், அஃது அடிமைத் தனத்துக்கு அறிகுறியாகின்றது. மேலும், பிறமொழிகளில் சொற்களின் வரவு கட்டுப்பாடான ஒரு சமூகத்தினரின் முயற்சி அன்று. அஃது இன்னொரு மொழியை மேம்படுத்துவதற்காகவுமன்று, அன்றியும், மொழி நூலாராய்ச்சியாளர் ஒரு மொழி அதன் பிறமொழி