"தமிழ் வாழ்க" இயக்கம் தமிழ் நாட்டில் மூன்றலைகளாக எழுந்துள்ளது என்று கூறலாம். முதலில் தமிழ் இயக்கம் ஆகும். இரண்டாம் அலை தமிழர் இயக்கம்! அதன் மூன்றாவது அலை தமிழிசை இயக்கம் ஆகும். இதுவே, இவ்வியக்கத்தின் மூன்று அலைகளிலும் முழு அலை ஆகும்.
இம்மூன்றனுள் தமிழ் இயக்கம் தோற்றுவித்த பெரியார்,
பார்ப்பனருள் தமிழறிவும் தமிழ்ப்பற்றும் ஒருங்கே கொண்டவ ரான உயர் திரு.வி.கோ. பரிதிமாற் கலைஞர் ஆவார். அவர் 'தமிழ் மாதுக்கு முகமுண்டோ' என வினவிய வடமொழித் திமிர் படைத்த தோழர்க்கு, 'வடமொழி மாது வாயற்றனளே' எனத் தன்மதிப்புடன் சுருக்கென விடையிறுத்த பெருவீரர் ஆவார். அவரது தனித்தமிழ்ப் பற்றை, உண்மைத் தமிழ்ப் பற்றை அவர் தம்பெயரைத் தமிழ்ப் பெயராக மாற்றிய ஒன்றினாலேயே அறியலாம்.
இரண்டாவது தமிழர் இயக்கம், இதனைக் கலை வகையில்
பேராசிரியர் சுந்தரம் பிள்ளையும், சமய வகையில் உயர்திரு.மறைமலையடிகளும், அரசியல் வகையில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களும் தோற்றுவித்து வளர்த்தனர்.
மூன்றாவது தமிழிசை இயக்கம். இஃது இலக்கிய வகையில்
இசைஞர் திலகம் உயர்திரு.தி.இலக்குமணப் பிள்ளையாலும், துணைமை தலைமை வகையில் செட்டிநாட்டு மன்னர் பெருந்தகை அண்ணாமலைச் செட்டியார் அவர்களாலும் தோற்றுவிக்கப்பட்டு, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து ஓங்கி வருகின்றது.
இசை, உலகனைத்துக்கும்- ஏன், உயிர்கள் அனைத்துக்குமே
பொது என்னலாம். முன் காலங்களில் கல்லுங்கூடச் சில