பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'தமிழ்' என்ற சொல்லே இனிமை எனப் பொருள்படும். தமிழ் மொழிக்கு அப்பெயர் காரணப் பெயர். இவ்வாறு தமிழர் கூறி வந்திருக்கின்றனர். அப்படியிருக்கத் தமிழ் இனிமையற்றது என்றோ, இசைக்குத் தக்கது அன்று என்றோ வாய் கூசாது சொன்னால், அவரை என் செய்வது? அதுவும் தமிழ்நாட்டுக்கு வெளியிலிருந்தன்று அவர்கள் சொல்வது! தமிழ் நாட்டினுள் ளிருந்து! தமிழன் உழைத்துப் பெற்ற சோற்றை உழைக்காமலேயே ஏய்த்துத் தின்னும் ஒரு புல்லுருவி வகுப்பார்-தமிழ்க்கலைக்குப் பதில் தமிழைத் தமிழரைக் கொல்லும், இழிவுபடுத்தும் பிறகலை வளர்த்துத் திரியும் ஒரு வகுப்பார்-கூறத் தமிழர் வாய்மூடிக் கேட்டுக்கொண்டிருப்பதென்றால் அது பொறுக்கக்கூடியதா?

    ஆனால், இவ்வுரையில் ஓர் ஆற்றலும் இல்லாமலில்லை.

வேறெல்லாத் துறைகளிலும் தமிழை அவமதிக்க ஒரு வடநாட்டு மொழியைச் - செத்த மொழியைத் தேடிய மக்கள், இசையை எதிர்க்கும் முயற்சி ஒன்றில் மட்டும் அவ்வளவு எட்டப் போகாமல், தமிழ் இனத்துட் சேர்ந்த ஒரு மொழியையே அடுக்க நேர்ந்ததுதான் அந்த ஆறுதல். வேறெம்மொழி இசையையும் விடத் தெலுங்கிசை இனிமையுடையதென்றால், அத்தெலுங்கின் உறவு மொழி-முதல் தாய்மொழி யாகிய தமிழும் இனிமையுடையதே என்பது கூறாமலேயே அமையுமன்றோ!

   இவ்வகையில், இவ்விரு மொழிகளின் உறவு வெறும்

மொழியுறவு மட்டுமன்று, என்று நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.

      உலகில் இனிமையுடைய மொழிகளாகச் சொல்லப்படும்

எல்லா மொழிகளையும், தமிழையும் எடுத்துப் பார்த்தால், இனிமைக்குக் காரணமான சில பொதுப் பண்புகள் காணப்படும். மேல்நாட்டில் இனிமையுடையவை என்று சொல்லப்படும் மொழிகள் இத்தாலியமும் பிரெஞ்சும்; கீழ்நாட்டில் பாரசீகமும் இந்துஸ்தானியும் தெலுங்கும். இவ் எல்லா மொழிகளிலும் பொதுவாகவும், தெலுங்கில் சிறப்பாகவும் ஓர் இனிய பண்பு காணப்படுகின்றது. அதாவது, அம்மொழிச்சொற்கள் யாவும் பெரும்பாலும் உயிர் எழுத்திலோ, மெய்யெழுத்திலோ முடிவதேயாகும். தெலுங்கு மொழி எப்போதும் உயிரிலேயே முடிவதுதான், அதற்கு இத்தனை அழகு கொடுப்பதாகக்